பக்கம்:பாலைக்கலி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் பாலைக் கலி 57 குழுவொடு புணர்ந்து போம், குன்று அழல் வெஞ் சுரம் இறத்திரால், ஐய! மற்று இவள் நிலைமை கேட்டிமின்: மணக்குங்கால் மலர்அன்ன தகையவாய், சிறிது நீர் தணக்குங்கால் கலுழ்பு ஆனாக் கண் எனவும் உள அன்றோ - சிறப்புச் செய்து உழையராப் புகழ்பு ஏத்தி, மற்று அவர் 15 புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல்? ஈங்கு நீர் அளிக்குங்கால் இறை சிறந்து, ஒரு நாள் நீர் நீங்குங்கால், நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ - செல்வத்துள் சேர்ந்தவர் வளன் உண்டு, மற்று அவர் ஒல்கத்து நல்கிலா உணர்விலார் தொடர்பு போல்? 20 ஒரு நாள் நீர் அளிக்குங்கால் ஒளி சிறந்து, ஒரு நாள் நீர் பாராட்டாக்கால், பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ . பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து, அம் மறை பிரிந்தக்கால் பிறர்க்கு உரைக்கும் பீடிலார் தொடர்பு போல்? என ஆங்கு, - யாம் நிற் கூறுவது எவன் உண்டு, எம்மினும் நீ நற்கு அறிந்தனை, நெடுந் தகை! - வானம் துளி மாறு பொழுதின், இவ் உலகம் போலும் - நின் அளி மாறு பொழுதின், இவ் ஆயிழை கவினே. 25 ஆதித்த மண்டலத்திற்கு வடமொழியிலே பகன்' என்றொரு பெயர் உண்டு. அந்தப் பகன் கண்ணில்லாதவன். அவனைப் போலவே கண்ணற்ற முகமுடையவன் திருதராட்டிரன் என்பவன். அவன் மக்களுள் மூத்தவனான துரியோதனன், சேர்க்கையால் ஐவர் என்று உலகம் புகழும் அரசர்களாகிய பாண்டவர்கள் உள்ளேயிருக்கவும், வேலைப்பாடு மிகுந்ததான அரக்கு மாளிகைக்குக் கொடிய நெருப்பினை அந்நாளிலே ஊட்டினான். அதேபோலக், களிப்புத் திகழும் மதநீரை யுடையவான கொடிய களிறு உள்ளே அகப்பட்டுக் கொள்ளவும், உலர்ந்த மூங்கில்களோடு கூடிய உயர்ந்த மலையிலே பெருநெருப்புப் பற்றிச் சூழ்ந்து கொண்டது. அப்பொழுது, புகையழல் சூழ எரியும் அரக்குமாளிகையை, வாயு புத்திரனானவன் உடைத்து, உள்ளத்து நேயங் கொண்ட தன்னைச் சேர்ந்தவரோடும் பிழைத்துத் தப்பிப் போனதைப் போல, கணையமரத்தையும் தகர்க்கும் தடக்கையினை உடைய வேழமானது, புதர்கள் அழியும்படியாக மிதித்து விலக்கிக் கொண்டே, தன் இனத்தோடும் கூடித் தப்பிச் செல்லும். அத்தகைய கொடிய வெம்மையான கானல்வழியைக் கடந்து செல்லவும்.நினைக்கின்றீரே! இவள் நிலைமையையும் கேட்டுச் செயற்குரியன ஆய்ந்து செய்வீராக. ه

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/65&oldid=822059" இலிருந்து மீள்விக்கப்பட்டது