பக்கம்:பாலைக்கலி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V பொருட்டு, ஐம்பெரும் புலவர் மணிகள், ஐவகைத் திணைகளையும் தழுவிச் செம்மைபெறப் பாடியதாகவே இந்நூலின் அமைப்பால் நாம் கருதவேண்டியதிருக்கின்றது. செய்யுள்களின் இனிதான துள்ளல் ஓசை நயமும், உவமைகளின் திறமும், உரைக்கப்படும் அறங்களின் செறிவும், எடுத்துக்காட்டும் பொருள்களும், இவர்கள் அவ்வத் திணைசார்ந்த விலங்குகளையும் நிலத்து மக்கள் வாழ்வையும் நன்கு பழகி அறிந்தவர்கள் என்பதையும் நமக்கு உணர்த்துகின்றன. கலித்தொகைச் செய்யுள்கள், முன்னிலைப் பேச்சாகவே அமைந்தன; பேசுவார் பேச்சோடு நம்மையும் இணைத்துப் பிணைப்பன; அவர் தம் உணர்வுகளோடு நம்மையும் ஒருங்கே இணைப்பன; ஒர் அருமையான கணிவையும் நிறைவையும் நம்பாலும் எழச் செய்வன, நிறைதமிழின் நீர்மையெல்லாம் தம்பாற் கொண்டவையாகவும் அமைந்துள்ளன. இந்த நிலையினாலே, கலித்தொகைச் செய்யுட்கள் தீட்டிக் காட்டும் காவிய நாடகங்களுள், நாமும் ஒருவராகவே கலந்து, நுகர்கின்ற இன்பமயக்கமும் நமக்கு மனத்திரையிலே உண்டாகின்றது. மக்களின் இயல்பான வாழ்வியலை இலங்கச் செய்வனவே இக் கலியிலுள்ள செய்யுள்கள். அக்காலத்து ஐவேறு நிலத்தவர்களின் பல்வேறு வாழ்க்கை நிலைமைகளையும், சுவை குன்றாமல் அழகோடும் நயமாகவும் விளக்குகின்றன. இயல்பிறந்த கற்பனைகளாகப் பாடாமல், இயற்கையின்கண் தோன்றும் செவ்விகளையே அழகுறச் சொல்லோவியப் படுத்தி அமைத்துள்ளனர். அவ்வழகுகள் சொல்லோவியத்திறத்தால் அவை தாமும் மேலும் அழகுபெற்று, நம்மையும் களிப்பூட்டுகின்றன. கலித்தொகைச் செய்யுள்களைப் பாடிய புலவர்களின் இலக்கு, குறிக்கோள், யாதாயிருக்கும் என்று கருதுங்கால், அது தம்முடைய புலமையைக் காட்டிப் பெருமை பெறுதற்கோ, அல்லது பிறரை உவப்பித்துப் பொருள் அடைதற்கோ மேற்கொண்டதன்று என்பதும் விளங்கும். எல்லாச் செய்யுள் களும், அக்காலத்து மக்களின் வாழ்வியலை ஒவியப்படுத்திக் காட்டுவதன்மூலம், பிற்காலத்தார் அறிந்து மகிழவும், புரிந்து மேற்கொள்ளவும், கருணையோடு செய்யப் பெற்ற உயிரோவியங்களாகவே உள்ளன. அன்பையும் ஆண்மையையும் பண்பையும் அடிப்படை யாகக் கொண்டு வாழ்ந்த பழந்தமிழரின் நல்லற வாழ்க்கையையே எம்மருங்கும் கலியில் கவினுறக் காணலாம். இத் தொகையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/7&oldid=822064" இலிருந்து மீள்விக்கப்பட்டது