பக்கம்:பாலைக்கலி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கலித்தொகை மூலமும் உரையும் இருங்குயில் - கரிய குயில் 10. கரிபொய்த்தான் - பொய்ச்சான்று கூறியவன். 1. எரிபொத்தி - காமத்தீ மூன்டு. 12. பொறை தளர் - மலர்ப்பாரம் தாங்காது தளரும். சிதரினம் - வண்டுக்கூட்டம். 17. கொளை - கொள்கை: ஒழுக்கம். 19. நெகிழ்பு கழன்று. 21. அலமலரல் வருந்தற்க. 32 இறவாது கடவாது. 24. பூசல் - துன்பம். 34. வாய்மை தவறாதான் பாண்டியன்! ("இளவேனில் பிறந்ததும் வருவேன்” என்றான்; வரவில்லை. அவன் காதலி பலவும் சொல்லிப் புலம்புகிறாள். அவள் தோழி தேற்ற முயல்கிறாள். அவ்வேளை, அவனே அங்கு வந்து விடக் காட்சி இனிதாக முடிகிறது) 'மடியிலான் செல்வம் போல் மரன் நந்த, அச் செல்வம் படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞ்று ஆர்ப்ப; மாயவள் மேனி போல் தளிர் ஈன, அம் மேனித் தாய சுணங்கு போல் தளிர்மிசைத் தாது உக; மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப, 5 அலர் தாய துறை நண்ணி அயிர் வரித்து அறல் வார, நனி எள்ளும் குயில் நோக்கி இணைபு உகு நெஞ்சத்தால், துறந்து உள்ளார் அவர் எனத் துணி கொள்ளல் - எல்லா! நீ. 'வண்ண வண்டு இமிர்ந்து, ஆனா வையை வார் உயர் எக்கர், தண் அருவி நறு முல்லைத் தாது உண்ணும் பொழுதன்றோ - 10 கண் நிலா நீர் மல்கக் கவவி, நாம் விடுத்தக்கால், ஒண்ணுதால் நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை? மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து அவர், வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ - "வலன் ஆக, வினை" என்று வணங்கி, நாம் விடுத்தக்கால், 15 ஒளியிழாய்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை? நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாடக் கூடலார் புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ - பல நாடு நெஞ்சினேம் பரிந்து, நாம் விடுத்தக்கால், சுடரிழாய்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை? 20 என ஆங்கு, உள்ளுதொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பாகி, எள் அறு காதலர் இயைதந்தார் - புள் இயல் காமர் கடுந் திண் தேர்ப் பொருப்பன் வாய்மை அன்ன வைகலொடு புணர்ந்தே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/86&oldid=822083" இலிருந்து மீள்விக்கப்பட்டது