பக்கம்:பாலைச்செல்வி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி 101 கொண்டு அலையும் வேந்தன், தன்னைப் பணியாத நாடுகளைப் பாழாக்க மூட்டிய தீயால், அந்நாடுகள் வெந்து கரியாகும் காட்சியை நினைப்பூட்டுவதுபோல், கோடை ஞாயிற்றின் கொடுமை மிகுதியால் விளைந்த செந்தீ சுட்டுக் கரியாக்கிய அக்காட்டின் கொடுமையும், அவ்வாறு, அனைத்தும் வெந்து சாம்பராயினமையால், வாயிலிட்டு உண்ணலாம் பொருள் எதையும் காணாது கலங்கிய அந்நிலத்துப் பெண்மான், கானல் மிகுதியால் ஆங்குத் தோன்றும் பேய்த்தேரை, உண்ணுநீர் என்று எண்ணித் தான் விரும்பும் தன் கலைமானோடு, அப்பேய்த் தேரின் பின், ஒடி ஒடி ஏமாந்து இளைக்கும் கொடுமையும், மரஞ்செடி கொடிகளெல்லாம் மடியுமாறு, மழைமாறும் காலத்திலும் வற்றது வளர்ந்து, மானினம் கறிக்கும் உணவாய்ப் பயன்படும் மரலும் வாடவும், மலைகள் தம்பால் வளர்ந்துள மரங்கள் வெந்து சாம்ப லாகுமாறும், பாறைகள் பிளவுண்டு பொடியாகுமாறும் வெப்பம் உறவும், அம்மலை வாழ் மந்திகள் வருந்தவும், காயும் கோடையின் கொடுமை தாங்கமாட்டாது தளர்ந்த யானைகள், உண்ணுநீர்ச் சுனைகள் தோறும் சென்று, அவற்றில் நீரூற்று அற்றுவிட்டமையால், உண்ணலாம் நீர் இன்மை கண்டு, இறுதியில், போகும் தம் உயிரைப் போகவிடாது காத்தற் பொருட்டு, அச்சுனைகளிற் கலங்கிக் கிடக்கும் சேற்றினைச் சுவைக்கும் கொடுமையும், அவன் மனக்கண் முன் தோன்றி மருட்டின. இக்கொடுமை மிக்க அக்காட்டு வழியில் இவளை அழைத்துச் செல்வதா என எண்ணி, நடுங்கிற்று அவன் உள்ளம். இவளை அக்காட்டு வழியில் அழைத்துச் செல்லின், இவள் நிலை என்னாம் என்பதை அவன் அகக்கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/103&oldid=822103" இலிருந்து மீள்விக்கப்பட்டது