பக்கம்:பாலைச்செல்வி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 இ. புலவர் கா. கோவிந்தன் கண்டு கலங்கிற்று. “அழகிய தாமரையின் அகவிதழ் போலும் அவள் மெல்லிய அடிகள், கோடையின் வெம்மையால் கொதிப்பேறிக் கிடக்கும் அப்பாலை நிலத்துப் பரற்கற்கள் மீது பட்டவுடனே, சாதிலிங்கத்தைப் பூசி வழித்தாற் போல் சிவந்து விடுமே! அதை யான் எவ்வாறு காண்பேன் : சிங்கக் கால்மேல், சிறப்புறப் பண்ணிய ஆடும் கட்டிலில், அன்னத்தின் துாவியால் ஆய படுக்கையில் படுத்து உறங்கும் மெல்லியளாய இவள், செல்லும் இடைவழியில், சிங்கத்தின் குரல் கேட்பின், சிந்தை கலங்குவளே ! சிங்கத்தின் குரல் கேட்கவே நடுங்குவாள், அச் சிங்கமே எதிர்வரக் காணின், என்னாவளோ ? மழை இன்மையால், இயல்பாகவே வாடிப்போன புதர்கள், வெய்யிலின் வெப்ப மிகுதியால், உயிர் அற்று உலர்ந்து போக, அதில் காட்டுத் தீப் பற்றிப் பேரொலியோடு பரவி எரியுங்கால், அவ்வெரியின் இடைபுகுந்து விரைந்து வீசும் அனற் காற்று, மழை பெய்யத் தளிர்க்கும் மாந்தளிர் போலும் இவள் மேனியிற் படின், அம்மேனியின் அழகு அழிந்து போகுமே!’ என்றெல்லாம் எண்ணி எண்ணி ஏங்கினான். அதனால், அவள் அருகிற் சென்று, அன்போடு நோக்கிக், காட்டின் கொடுமை, அக்காட்டு வழியில் செல்லலாகா அவள் மேனியின் மென்மை, அத்தகையாள் ஆங்கு வரின் அடையலாகும் துயர்க் கொடுமை ஆகியவை, விளங்குமாறு விரிவாக எடுத்துரைத்து, "உடன் வருதல் ஒவ்வாது. ஆகவே விட்டில் தங்கி, யான் போக விடை தருக!” என்று வேண்டிக் கொண்டான். . இளைஞன் கூறியனவும், அவன் அதைக் கூறிய வகையும், தன்னை அழைத்துச் செல்வதோ, தானும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/104&oldid=822104" இலிருந்து மீள்விக்கப்பட்டது