பக்கம்:பாலைச்செல்வி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 103 போகாது நின்று விடுவதோ செய்வான்; அவன் போவது உறுதி; அதுவும், தன்னைத் தவிக்குமாறு தனியே விடுத்துப் போவது உறுதி என்பதைத் தெளிவாக்குவதாக உணர்ந்தாள் அப்பெண். தன்னைத் தனித்து விடுத்து அவன் மட்டும் பிரிவன் என்பதை அறியவே, அவள் மிகவும் வருந்தினாள். அம்மட்டோ! அவன் கூறிய அக்காட்டின் கொடுமை அவள் வருத்தத்தை மேலும் வளர்த்தது. செய்வதறியாது வருந்தினாள். அந்நிலையில் தனக்கு ஆறுதல் கூறுவாள், தன் துயர் போகும் வகை கூறித் துணை புரிவாள் தன் தோழியே என அறிந்து, அவள் பாற் சென்று, தன் காதலன் கருத்தைக் கூறிக் கண்ணிர் விட்டுக் கலங்கினாள். உலகியல் அறிந்தவள் அத் தோழி. அதனால், இளைஞன் முடிவு தவறன்று எண் உணர்ந்தாள். ஆனால், அப் பெண்ணோ உலகியல் உணராதவள். மேலும் அண்மையில் மணந்து கொண்டவள். காதலனோடு கூட இருந்து பெறலாம் பேரின்ப நுகர்ச்சியை வேண்டுமளவு பெற்று, அதனால் அதன்பால் வெறுப்புள்ளம் கொள்ளாதவள். அதற்கு மாறாக, அவ்வின்பத்தை ஆரத் துய்க்கத் துடித்துக் கொண்டிருப்பவள். அதனால், அவன் போக்கு நன்று ! பொறுத்திருப்பதே நின் பெண்மைக்கு அழகு! என எடுத்த எடுப்பிலேயே கூறிவிடின், அவள் துயர் முன்னினும் பெரிதாம். அந்நிலையில் அவ்வாறு கூறுவது பொருந்தாது அவன் பிரிவது உறுதியாயினும், பொய்யாகவாவது, அவன் போகான் எனக் கூறுவதே, அந்நிலைக்குப் பொருந்தும் என உணர்ந்தாள். அதனால், 'அவன் பிரிந்து போய்விடுவனே! என அழுது ஏங்கி நிற்பாளை நோக்கிப், "பெண்ணே! அவன் உன்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/105&oldid=822105" இலிருந்து மீள்விக்கப்பட்டது