பக்கம்:பாலைச்செல்வி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி 105 பேதைமை! அவன் போகான். போவேன் என்று கூறிய அதுவும் ஒரு விளையாடல் குறித்தே! அதுவும் ஒர் இன்ப நிலைக்கே! அது கேட்டு வருந்தும் நீ, அவ்வருத்த நிலையில் எவ்வாறுள்ளாய் என்பதைக் காண்பதற்கே! நடுங்கும் நின் நிலை கண்டு நகைத்து மகிழ்தற்கே! ஆகவே, மனங் கலங்காதே!” என்று கூறித் தேற்றினாள். தேற்றிய தோழியின் தெளிவுரை இது: “செருமிகு சிணவேந்தன் சிவந்து இறுத்த புலம்போல எரிவெந்த கரிவறல் வாய்புகுவ காணாவாய்ப் பொரிமலர்ந் தன்ன பொறிய மடமான், திரிமருப்பு ஏறொடு தேர் அல்தேர்க்கு ஒட, மரல்சாய, மலை வெம்ப, மந்தி உயங்க, 5 உரல்போல் அடிய உடம்பு உயங்கு யானை, ஊறுநீர் அடங்கலின், உண்கயம் காணாது, சேறு சுவைத்துத், தம் செல்லுயிர் தாங்கும் புயல்துளி மாறிய போக்கரு வெஞ்சுரம்; எல்வளை! எம்மொடு நீவரின், யாழநின் 10 மெல்லியல் மேவந்த சீறடித் தாமரை அல்லிசேர் ஆய்இதழ் அரக்குத் தோய்ந்தவை போலக், கல்லுறின், அவ்வடி கறுக்குந அல்லவோ? நலம்பெறு சுடர்நுதால் எம்மொடு நீ வரின் இலங்குமாண் அவிர்துவி யன்ன மென் சேர்க்கையில் 15 துலங்குமான்மேல் ஊர்தித் துயில் ஏற்பாய், மற்றுஆண்டை விலங்குமான் குரல்கேட்பின் வெருவுவை அல்லையோ? கிளிபுரை கிளவியாய்! எம்மொடு நீ வரின், தளிபொழி தளிரன்ன எழில்மேனி கவின்வாட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/107&oldid=822107" இலிருந்து மீள்விக்கப்பட்டது