பக்கம்:பாலைச்செல்வி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iԱ6 இ. புலவர் கா. கோவிந்தன் முளிஅரில் பொத்திய முழங்கு அழல் இடைபோழ்ந்த 20 வளிஉறின், அவ்வெழில் வாடுவை அல்லையோ? என வாங்கு, அனையவை காதலர் கூறலின், வினைவயின் பிரிகுவர் எனப் பெரிது அழியாதி; திரிபு உlஇக் கடுங்குவரை அருமைய காடெனின் அல்லது 25 கொடுங்குழாய் ! துறக்குநர் அல்லர்; நடுங்குதல் காண்மார், நகை குறித்தனரே.” தன் மென்மையும், காட்டின் கொடுமையும் கூறித் தன்னை உடனழைத்துச் செல்ல மறுத்துப், பிரிந்து செல்கிறான் தலைவன் என்பதறிந்து, தலைவி வருந்த, தலைவன் நகையாடிக் கூறியதல்லது போகான் எனக் கூறித் தோழி ஆற்றுவித்தது. இது. 1. சிவந்து-கோபித்து, இறுத்த-தாங்கிய, புலம்-பகைவர் நாடு, 2. கரிவறல்-கரிகளைக் கொண்ட, வறண்ட அந்நிலத்தில், 3. பொரி-புள்ளி; 4. தேர் அல்தேர்-பேய்த் தேர் என வழங்கப்பெறும் க்ானல் நீர், ஓடும் தேரை நீக்குதற்குத், தேர் அல்லாத தேர் என்றார்; 5. உயங்க-வருந்த 10. யாழ-அசை; 11. மேவந்த-பொருந்திய, சீறடி-சிறிய அடி 12. அல்லி-தாமரையின் அகத்தே கொட்டையைச் சூழ்ந்துள்ள தாதுக்களை அடுத்திருக்கும் அவ்விதழ்கள், அரக்குசெவ்வாக்கு 15. மாண் அவிர்-மாட்சிமை மிக்க, தூவி-இறகு 17. விலங்குமான்-விலங்காகிய சிங்கம், வெருவுதல்-அஞ்சுதல்; 18. புரை-ஒத்த; கிளவி-மொழி: 19, தளி-மழைத்துளி, 20. முளிஉலர்ந்த, அரில்-புதர்; பொத்திய-மூண்ட 21. வளி-காற்று 25. குரை-இசை நிறை பொருள் இல்லை; கடுமையும் அருமையும் உடைய காடு என்க: 27.காண்மார்-காண்பதற்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/108&oldid=822108" இலிருந்து மீள்விக்கப்பட்டது