பக்கம்:பாலைச்செல்வி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 109 இனிக்க, இன்னுரை வழங்கிப் பாராட்டியவன், அவ் வுள்ளம் வருந்தி அழியுமாறு, "பிரிந்து போய்விடுவேன்!" எனும் சொல் வழங்கவிட்டனனே! யான் என் செய்வேன்? அவனைப் பிரிந்து எவ்வாறு உயிர் வாழ்வேன்? என்றெல்லாம் எண்ணி வருந்தலாயினள். அவள் துயர்நிலை அறிந்தாள் தோழி. பொருள் எனப் படுவதன் உண்மை இயல்பினை நன்கு அறியாமையால், இன்ப நுகர்விற்குத் துணைபுரிய வருவதே பொருள்; அதற்கு மாறாக, அவ்வின்பம் அழிய வருவது பொருளாகாது என்ற பொருளின் உண்மை இயல்பை உணராமையால், அவன் அம் முடிவினை மேற்கொண்டுள்ளான். அவனை அவ்வுண்மையினை உணருமாறு செய்துவிடின், பிரிந்து போகும் தன் முடிவினை மாற்றிக்கொள்வன் என எண்ணினாள். உடனே அவ்விளைஞன் பால் சென்று, "அன்ப! உலகில் பொருள் என்பதன் உண்மை இயல்பை உணராதார் பலர். அவர்கள் பொருளினும் சிறந்தது உலகில் இல்லை எனக் கூறுவர். அவர் கொண்ட முடிவு அறியாமையின் விளைவு. அவ்வறியாமை நின்னையும் பற்றிக் கொண்டு விட்டதே என் அஞ்சுகிறேன் யான். உலகில் உயர்ந்தது பொருளே என நீ கருதுவதற்கு, அவ்வறியாமைதான் காரணம் போலும்! அன்ப! உலகில் சிறந்தது பொருளன்று. அப் பொருளினும் சிறந்தனவும் உலகில் உள. அவற்றை அப் பொருளின் துணையினைப் பெறமாலே பெறுதலும் இயலும். ஆகவே, பொருள் மேற் கொண்ட பற்றினால், அறிவிழந்து, பொருளே போகம்; பொருளே அனைத்தும் என்று கொண்டு, உண்மை இன்பத்தை இழந்து விடாதே. "மேலும், அன்ப! 'எம் காதல் வாழ, வளர, அக்காதற் பயனைக் குறைவின்றிப் பெற, யாம் பொருள் தேடிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/111&oldid=822112" இலிருந்து மீள்விக்கப்பட்டது