பக்கம்:பாலைச்செல்வி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 புலவர் கா. கோவிந்தன் அன்புத் தொடர்பு அற்ற வழியே, அவளை அத்துயர் தாளாது உயிரிழக்குமாறு விட்டுப் பிரிந்த வழியே பெறலாகும் பொருள், உண்மையில் பொருளாகாது. செல்வம் என்பது சிந்தையின் நிறைவு; அல்கா நல்குரவு அவாவெனப்படும்; ஆரா இயற்கை அவா நீப்பின், அந்நிலையே பேரா இயற்கை தரும்! என்றெல்லாம் கூறுவர் பெரியோர். உள்ள நிறைவே உயர்ந்த பொருளாம். ஆகவே, இவள் இறக்க, இவள்பால் பெறலாகும் பேரின்பத்தை நீ இழக்க, வரும் பொருளின்பால் கொண்ட பற்றை விடுதலே பெரும் பொருளாம். இவ் வுண்மையினை நீ யுணர்ந்து, காதலிக்கும் இவளை நின்பால் பிரிவறியாப் பேரன்பு கொண்டுள்ள இவளை மதித்துப் பொருள் தேடிப்போகும் நின் வேட்கையை விடுவாயாக!” என வேண்டிக் கொண்டாள். அறிவுரை வழங்கும் அவள் வேண்டுகோள் இது: “அணைமருள் இன்துயில் அம்பனைத் தடமென்தோள், துணைமலர் எழில்நிலத்து ஏந்துஎழில் மலர்உண்கண், மணமெளவல் முகையன்ன மாவீழ் வான்நிரை வெண்பல், மணம் நாறு நறுநுதல், மாரிவிழ் இருங்கூந்தல், அலர்முலை ஆகத்து, அகன்ற அல்குல், х 5 சிலநிரை வால்வளைச் செய்யாயோ! எனப் பலபல கட்டுரை பண்டையிற் பாராட்டி, இனிய சொல்லி, இன்னாங்குப் பெயர்ப்பது இனி அறிந்தேன் அது துணி ஆகுதலே; பொருள் அல்லால் பொருளும் உண்டோ? என யாழ நின் 10 மருளிகொள் மடநோக்கம் மயக்கப்பட்டு அயர்த்தாயோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/114&oldid=822115" இலிருந்து மீள்விக்கப்பட்டது