பக்கம்:பாலைச்செல்வி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 113 காதலார் எவன்செய்ப, பொருள் இல்லாதார்க்கு? என ஏதிலார் கூறும்சொல் பொருளாக மதித்தாயே! செம்மையின் இகந்துஒரீஇப் பொருள் செய்வார்க்கு அப் (பொருள் இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ? 15 அதனால், எம்மையும் பொருளாக மதித்தீத்தை; நம்முள்நாம் கவவுக்கை விடப்பெறும் பொருள்திறத்து அவவுக் கைவிடுதல் அது மனும் பொருளே.” தலைமகன் பிரிவுக் குறிப்புணர்ந்து வருந்திய தலைவியின் நிலை கண்ட தோழி, தலைவன்பால் சென்று, காதற்பெருமையும், பொருளின் குறையும் கூறிச் செலவழுங்குவித்தது இது. 1. அணை-தலையணை, மருள்-ஒத்த, இன்துயில் அணை என மாற்றுக, பணை-மூங்கில்; தட-பெருமை; 2. துணை மலர்-இரண்டாக இணைந்த மலர், நீலத்து-நீல மலர் போலும், 3. மெளவல்-முல்லை; முகை-அரும்பு மாவீழ்- வண்டுகள் விரும்பும்; மாவீழ் மண மெளவல் என மாற்றுக; வால்-வெண்ணிறம் வாய்ந்த, 4. இருங்கூந்தல்-கரிய கூந்தல், 8. இன்னாங்குப் பெயர்ப்பதுதுன்பத்திடத்தே துரத்துவது, 9. துனி-வெறுப்பு; 10. யாழஇசைநிறை, 11. மருளிகொள்-மயக்கம் கொண்ட அயர்ந்தாயோ(அன்பை) மறந்தாயோ; 14. செம்மை-செந்நெறி, இகந்து ஒரீஇ-கைவிட்டு நீங்கி, 17. மதித்தீத்தை-மதிப்பாயாக, 18. கவவுக்கை-கூடிவாழும் வாழ்வு; விட-விடுதலால், தான் அவள் எனும் வேற்றுமை இன்மையால், "எம்மையும்”, “நம்முள்நாம்” எனத் தலைமகள் கூறுமாறே தோழி கூறினாள். 19. அவவு-அவா; பொருளிடத்து ஆசை மனும்-நிலைபெற்ற. பாலை-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/115&oldid=822116" இலிருந்து மீள்விக்கப்பட்டது