பக்கம்:பாலைச்செல்வி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 இளமையும் இன்பமும் அரசராய்ப் பிறந்தார்க்குத் தம் நாட்டு மக்கள் நல் வாழ்வு வாழ்வதற்கு வேண்டும் பொருட் செல்வத்தை ஈட்டிக் கொணர்தலும், அந்நாட்டு மக்கள் அறவழியில் ஒழுகுதற்கு வேண்டும் அறிவினை ஊட்டவல்ல அறிவின ராதலும், அந்நாடு பகைவரால் பாழுறாவண்ணம் அந் நாட்டின் எல்லைப் பகுதிகளைக் காத்தலும் இன்றியமை யாதன என்பதையும், ஆனால், அரசரே ஆயினும், அவர் அக் கடமைகளை ஆற்ற வேண்டியவராதல் கருதி, அவர் என்றும் இளமை குன்றாது இருத்தல் வேண்டும் என எண்ணாது, அவர்க்கும் இளமையை அழித்து, முதுமையை அளித்து, இறுதியில் இறப்பினைத் தர வல்லது இயற்கை என்பதையும் உணர்ந்த ஒரு தமிழ் மகள், தான் உணர்ந்த அவ் வுண்மையினைத் தன் தோழியின் கணவனுக்கு உணர்த்தும் திறன் உணர்ந்து மகிழ்தற்குரியதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/116&oldid=822117" இலிருந்து மீள்விக்கப்பட்டது