பக்கம்:பாலைச்செல்வி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 இ. புலவர் கா. கோவிந்தன்

  • பெரிதும் வருந்துவள்; அவள் கண்கள் கண்ணிரால் நிறையும்; அவள் கவின் அழியும். ஆதலின், இந்நிலையில், அவளைப் பிரிந்து போவது பொருந்துவதன்று; அவள் வருத்த நிலை கண்டும், அது கண்டு யான் கூறும் அறிவுரை கேட்டும், பிரிந்து போவதைக் கைவிடாது மேற்கொள்வதே நின் கருத்தாயின், யான் கூறுவனவற்றையும் கேட்டு அவற்றிற்கு விடை தந்துவிட்டுப் பின்னர்ப் பிரிவாயாக!

"ஐய! நின் பிரிவு எதைக் கருதியது என்பதை யான் அறிேேயன். நீ எது கருதிப் பிரியினும், நீ கண்டு கருத்திழத்தற்குக் காரணமாய் நிற்கும் அவள் கவின் அன்றே அழிந்து போம். அழகிய அசோகின் இளந்தளிர் போன்றது என் காத்லியின் மேனி என இன்று நீ பாராட்டும் அவள் பேரழகு பாழாம். அதை, மீட்டு வந்து, உன்னாற் காணல் இயலாது. பசலை படர்ந்து பாழான உடலையே அன்று நீ காண்டை. இன்று நீ மேற்கொள்ளும் இப்பிரிவு, பொருள் கருதிய்தாயின், நின் நாட்டம் அக வின்பத்தை மறந்து, புற வின்பத்திடத்ததாயின், ஐய! யான் ஒன்று வினவுவள்; பொருளிட்டி வருவதே நினைவாய்ச் சென்று, அளந்து காணலாகாவாறு, நீ ஈட்டிக் கொண்டு வரும், புதிது புதிதான பெரும் பொருள்கள், நின் பிரிவுத் துயரால் இழந்த அவள் மேனியின் பொன்னிறத்தைப் பெற்றுத் தரும் ஆற்றல் உடையகொல்? அவ்வாற்றல், அப் பெரும் பொருளுக்கு உண்டு என உணர்வையேல், நீ பிரிந்து செல்வதை யாம் தடை செய்யேம். "ஐய! 'உடலிற்கும் உள்ளத்திற்கும் இன்பந் தரும் இனிய ஒளி வீசும் முழுத் திங்கள் இவள் முகம்! என நீ ன் பாராட்டும் வள் கம், நீ பிரிந் போன Աl/ (ԼՔ நிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/118&oldid=822119" இலிருந்து மீள்விக்கப்பட்டது