பக்கம்:பாலைச்செல்வி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 இ. புலவர் கா. கோவிந்தன் மீண்டும் பெறலாகா அவ்விளமைக் காலத்தைப் பயன்கொண்டு இன்பம் துய்க்கத் தவறியவர், பின்னர், அவ்வின் பவுலகை எட்டிப் பார்த்தலும் இயலாது. இன்பம் துய்க்க வேண்டிய இளமைக் காலத்தை, அது வாய்க்காது வறிதே கழித்தார் வாழ்நாள், விரைவில் முடிந்து போதலும் உண்டு. ஆனால், பொருள் ஈட்டி அறம் புரிதற்கு, இன்ப நுகர்ச்சிக்கு இருப்பது போலும் இத்தகைய காலத்தடை யேதும் இல்லை; அதை இளமையிலும் மேற்கொள்ளலாம்; முதுமையிலும் மேற்கொள்ளலாம்; அதுமட்டுமன்றி; பொருளீட்டு முயற்சியினை இளமையில் மேற்கொண்டவர், 'இன்பம் துய்க்க வேண்டிய இளமையைக் கொன்னே கழித்துவிட்டோம்! எனும் கவலை உள்ளிருந்து அலைப்ப தால், பொருளிட்டு முயற்சியினை முட்டின்றி முடிக்க மாட்டாது, கலங்குவதும் செய்வர்; அதற்கு மாறாக, இளமையை இன்ப நுகர்ச்சியில் கழித்துப் பொருளிட்டு முயற்சியினைப் பின்னர் மேற்கொண்டவர், அத்தகைய மனக்குறையேதும் இலராய்த் தம் எண்ணம் முழுவதையும் பொருளிட்டும் முயற்சியில் செலுத்துவர் ஆதலின், பெரும் பொருளிட்டிப் பெருங்கொடை வள்ளலாய் வாழ்தல் அவர்க்கே எளிதில் வாய்க்கும். இளமையில் இயற்ற வேண்டுவன இவை; முதுமையில் முடிக்க வேண்டுவன இவை என வரையறை வகுத்துக் கொண்டு வினையாற்று பவரே, மூதறிவாளராவர். அதை அதை, அந்த அந்தக் காலத்தில் முடித்தல் வேண்டும்; ஆடும் பருவத்தை ஆடிக் கழித்தல் வேண்டும்; பாடுபடும் பருவத்தைப் பாடுபட்டுக் கழித்தல் வேண்டும்; இதை முறை பிறழக் கொள்வதால், எதிலும் வெற்றி காணல் இயலாது; எடுத்த வினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/12&oldid=822121" இலிருந்து மீள்விக்கப்பட்டது