பக்கம்:பாலைச்செல்வி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 புலவர் கா. கோவிந்தன் நினக்கும் வேறுபாடு இன்றாம். மேலும் பகைவரைப் பணிய வைப்பதே நின் கருத்தாயின், அதற்கு, இவளைப் பிரிந்து, படையோடு சென்று போரிட வேண்டுவது கூடாது. அது ஆண்மை ஆகாது. நீ தம்மீது சினங் கொண்டுள்ளாய், தம்மை அழிக்கப் படை சேர்த்து விட்டாய் என்பதை அறிந்த அவ்வளவிலேயே, அப் பகைவர் நின்னைப் பணிந்து திறை தருதல் வேண்டும். அதுவே நின் பேராண்மைக்கு அழகாம். அதற்கு மாறாக, நீ பெரும் படையோடு அவர் நாட்டுட் புகுந்து போரிட்டு அழித்த பின்னரே, அவர் பணிவராயின், அது நினக்கு இழிவாம். அந்நிலையில், நீ செல்லும் வழியில், ஆறலைத்து வாழும் தம்மை அழிக்கப் பல படை துணை செய்யப் பேரரசர் திரண்டு வருகின்றனர் என்பதை அறிந்தும், அவரை அம்பேவி அழித்தல் ஆண்மையாகாது என்று எண்ணி, அம்பெடுக்க நாணித் தம் வில்லின் நாணைத் தெறித்து ஒலி எழுப்பி, அவ்வொலி கேட்டே அவ்வரசர் அஞ்சி ஒடச் செய்யும் கள்வர் செயலினும் நின் செயல் இழிவுடைத்து. ஆக, எவ்வழி நோக்கினும், நின் போக்கு பிழையுடைத்து. ஆகவே போவது தவிர்க!” எனக் கூறினாள். * -- ஆனால், பின்னர்க் கூறிய அவ்வறிவுரையினை, அவ்வாறே வெளிப்படையாகக் கூறல், தன் பெண்மைக் கும், அவன் ஆண்மைக்கும் இழுக்காம் என உணர்ந்து, "ஐய! இவளைப் பிரிந்து போகும் நீ. கடந்து செல்ல வேண்டிய அக்காட்டு வழி, கலைமானின் முறுக்குண்ட கொம்பு போலும் தாடியை உடையராய், அவ்வழி வருவாரை, அருளையும், அன்பையும் மறந்து கொன்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/122&oldid=822124" இலிருந்து மீள்விக்கப்பட்டது