பக்கம்:பாலைச்செல்வி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 113 என உணர்ந்தாள். இவள் வருந்த வரும் பொருள் பொருளாகாது. இவளை அழ விடுத்துச் சென்று அறிவினைப் பெற விரும்புவது அறிவுடையமையாகாது. மனைவியைப் பிரிந்து போய்ப் பகைவரைப் பணிய வைத்தல் பேராண்மையாகாது என்பதையும், அவன் உணருமாறு செய்யின், அவன் உள்ளம் மாறும்; தன் போக்கினை மாற்றிக் கொள்வன் என எண்ணினாள். அதனால் மீண்டும் அவனை நோக்கி, "ஐய! பொருள், தேடிப் பெற வேண்டியதே யாயினும், அதைப் பெறுதற்காகப் பிறரைத் துன்புறுத்தல் உயர்ந்தோர்க்கு ஒழுக்கமாகாது. நீ பொருள் தேடிப் புகழ் பெற, இவளை வருத்துவது நினக்குப் பொருந்தாது. அதை நீ விரும்புவை யாயின், நினக்கும், நீ செல்லும் வழியில், வழிப்போவாரை வதைத்துப் பொருள் கவரும் வஞ்சகர்க்கும் வேறுபாடு இன்றாம். மேலும், தேடிச் சேர்க்கும் பொருள் அறவழியில் வந்ததாதல் வேண்டும். அன்பும், அருளும் துணைசெய்ய வந்ததாதல் வேண்டும். அதை எவ்வழியிலாயினும் அடைதல் வேண்டும் எனும் ஆசையால், அன்பையும், அருளையும், அறநெறியையும் மறந்து விடுதல் கூடாது எனும் அறிவினைக் கைவிடுதல் அழகன்று. கற்பன கற்றுக் கற்ற வழி நிற்கும் ஒழுக்க நெறி உணரும் கருத்தோடு செல்லும் நீ, இவள்பால் காட்டலாம் அன்பையும், அருளையும் - மறந்துவிடுதல் மாண்பன்று. அது அறிவுடையோர்க்கு அழகன்று. அவ்வறிவினை மதியாது இவளைப் பிரிந்து செல்வதே நின் கருத்தாயின், செல்லும் வழியில், பொருள் கருதி, அன்பையும் அருளையும் மறந்து, போவார் உயிரைப் போக்கும் ஆறலைக் கள்வர்க்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/121&oldid=822123" இலிருந்து மீள்விக்கப்பட்டது