பக்கம்:பாலைச்செல்வி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 இ. புலவர் கா. கோவிந்தன் அறுத்து எறியலாகா அன்பாகிய சங்கிலி கொண்டு பிணித்த, இவள் தொடர்பினைக் கைவிட்டுப், பகைவர் நாட்டுள் புகுந்து, அப்பகைவரைப் பணி கொண்டு, அவர் பணிந்து தர, நீ பெறும் அப் பெரும் பொருள், அவள் கண்களின் கவினை மீட்டுத் தர வல்லதாமோ? அவ்வெற்றிப் புகழிற்கு, அவள் கருவிழியின் கண்ணிரை மாற்றிக் கவினளிக்கும் வல்லமை உண்டேல், நீ பிரிந்து இன்றே செல்க, யாம் அதைத் தடை செய்யேம். ஆனால், ஐய! நின் பிரிவால் பயனற்று அழிந்து போகும் இவள் இளமை அழகினை மீட்டுத் தரும் ஆற்றல், நீ தேடிக் கொணரும் செல்வத்திற்கோ, அரிதின் முயன்று பெறும் அறிவு ஒழுக்கங்களுக்கோ, பகைவரை வென்று பெறும் வெற்றிச் செல்வத்திற்கோ இல்லை. இழந்த இளமை இழந்ததே! அதை மீட்டுத் தரும் ஆற்றல், உலகில் எப்பொருட்கும் இல்லை. ஆனால், அவ்வாறு இழந்தால் மீண்டும் பெறலாகா இளமையை அழிந்து போக விடுத்துப் பிரிந்து போய்ப் பெறக் கருதும் செல்வத்தையோ, அறிவையோ, வெற்றிப் புகழையோ, வாழ்நாளின் எப்பரு வத்தும் பெறலாம். அவற்றைப் பெற இளமையே ஏற்றது எனும் வரையறை இல்லை. ஆனால், இளமை இன்பம் அத்தகையதன்று. அதை, அவ்விளமைக் காலத்திலேயே பெறுதல் வேண்டும். அதை அக் காலத்தில் பெறாது கைவிடின், அதை மீட்டும் பெறுதல் இயலவே இயலாது. ஆகவே, ஐய! யான் கூறியனவற்றை நன்கு ஆராய்ந்து நோக்கிய பின்னர், நீ விரும்பியவாறே செய்க!” எனப் பலப்பல கூறி அவன் பிரியாமையினை வேண்டினாள். இவ்வளவு கூறியும், அவள் உள்ளம் அமைதி உற்றிலது. அவன் போக்கினைத் தடுக்க இவை போகா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/120&oldid=822122" இலிருந்து மீள்விக்கப்பட்டது