பக்கம்:பாலைச்செல்வி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 ఊ புலவர் கா. கோவிந்தன் கைவிட்டு, நம்மையும் அறவே மறந்து, பிரிந்து சென்று விட்டார். அவர் செய்த இவ்வறனல்லாச் செயலால், அவர்க்கு யாது கேடு வருமோ என அஞ்சுகிறது என் உள்ளம். மேலும், அவர் சென்ற வழி, கடந்து செல்ல லாகாக் கொடுமையுடையது என்ப. வெய்யிலின் வெப்பம் மிகுந்தது; மழைத்துளி பெறாதது; கடுங்காற்று வீசுவது என்றெல்லாம் கூறுவர். நம்மை வருந்த விடுத்துச் சென்ற பழிக்கு அஞ்சாத அவர் அறமில் செயல் கண்ட அவ்வியற்கைத் தெய்வங்கள், அவர்க்குத் தந்த தண்டனை யின் பயன்தானோ, அக்காட்டின் கொடுமையால் அவர் துயர் உறுவது என எண்ணி அஞ்சுகிறது என் உள்ளம். ஆகவே, தோழி! எம் கணவர் செல்லும் அப்பாலை நிலத்து வானவெளியில் உலாவி வரும் ஏ நீர்நிறை மேகமே செல்லும் அவர் கால்களை, அந்நிலத்துப் பரற்கற்கள், காயும் ஞாயிற்றின் கதிர்களால் தாம் பெற்ற வெம்மையால் சுட்டுத் துன்புறுத்தாவாறு, பெருமழை பெய்து, அக்கற்களின் வெப்பத்தை மாற்றிக் குளிர்ச்சியைத் தாராயோ? அது தருமாறு நின்னை வேண்டுகிறேன்! என்றும், செல்லும் அவர், சேர்ந்து நிற்க நிழலும் பெறாது வருந்துமாறு, ஆங்குள்ள மரங்கள் இலை உதிர்ந்து உலர்ந்து போமாறு கதிர்களை வீசிக் காயும் ஏ, ஞாயிறே செல்லும் அவர், அல்லல் இன்றி அடைதற் பொருட்டு, மரங்கள் மடிந்து போமாறு காயும் நின் கொடுமையினை விடுத்துக் கருணை புரிவாயாக!' என்றும், கோடையின் வெம்மை யால் உள்நீர் வற்றி உலர்ந்து போன துருகளைப் பற்றி எரியும் பெருநெருப்பின் இடைதுழைந்து வீசி, அவ்வழிச் செல்லும் எம் கணவரை, நின் வெப்பத்தால் வாட்டும் ஏ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/128&oldid=822130" இலிருந்து மீள்விக்கப்பட்டது