பக்கம்:பாலைச்செல்வி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 127 வளியே! சற்றே நின் வெப்பம் தணிந்து வீசாயோ, அவ்வாறு வீசுமாறு நின்னை வணங்கி வேண்டிக் கொள் கிறேன்! என்றும், அப்பாலை நிலத்துத் தெய்வங்களாய மழைதரு மேகத்தையும், ஞாயிற்றையும், காற்றையும் கைகூப்பி வணங்கி வேண்டிக் கொள்வோமா? அவ்வாறு வேண்டிக் கொள்வதால் பயன் வாய்க்குமா?" எனத் தன் வேட்கை மிகுதியால் வினவினாள். அப் பெண்ணின் உள்ள நிலையை, அவள் அன்பின் சிறப்பை, அவள் கற்பின் பொற்பைக் கண்டாள் தோழி. அவள் கூறிய மொழிகள், தேன்போல் இனித்தன அவட்கு. கோள்கள் தம் நில்ை குலைந்து, உலகிற்கு மழை பெறா வறுமையை உண்டாக்கி விடுமாயின், அவற்றின் ஆற்றலை அழித்துத் தன் கற்பின் மேன்மையால், மழையினைத் தருவித்து மண்ணுலகைக் காக்கும் மாண்புடையாள் அவள். அத்தகு கற்புடையாள், தன் காதலன்பாற் கொண்ட அன்பின் மிகுதியால், அக்கற்பின் ஆற்றலை மறந்து, அக்கற்பின் ஆணைக்கு அடங்கிப் பணிபுரியும் பண்புடையவாய மேகத்தையும், ஞாயிற்றையும், காற்றை யும் கைகூப்பித் தொழ நினைக்கும் சிறப்பறிந்து போற்றி னாள். அந்நிலையில் பொருள் தேடிப்போன அவள் கணவனும் வந்து சேர்ந்தான். அவன் வரவினை, அவன் ஊர்க் கோடியில் வரும்போதே அறிந்து கொண்ட தோழி, அவளைப் பார்த்து, “நின் கணவர், நீ விரும்பியவாறே கேடொன்றும் இன்றி, அதோ வருகிறார் காண். வழியில் மழை, காற்று, ஞாயிறுகளால் அவர்க்கு எவ்வித ஊறும் நேர்ந்திலது என்பதை, அவர் நன்னிலை காணும் நீ எளிதில் உணர்ந்து கொள்வை. அவர், அவ்வாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/129&oldid=822131" இலிருந்து மீள்விக்கப்பட்டது