பக்கம்:பாலைச்செல்வி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 புலவர் கா. கோவிந்தன் அவற்றால் கேடுறாது வந்தது, நீ அவற்றை வணங்கி வழிபட்டு வேண்டிக் கொண்டமையால் அன்று; அவை நின்பால் கொண்ட அச்சமே அதற்குக் காரணம். மறுத்து ஒடும் மழையையும் பிடித்துப் பயன் கொள்ளும் பெருமை சால் கற்புடையாள் நீ என்பதை அறிந்த அவை, நின் கணவன் பிரிவாலும், அவர்க்கு ஆங்குத் தம்மால் துயர் உண்டாமே எனும் அச்சத்தாலும் பிறந்த வருத்த மிகுதியால், உன் உடல் அதன் நிறம் கெட்டுப் பசலை பரந்துவிடின், தங்களுக்கு உன்னால் என்ன கேடு வருமோ என அஞ்சிய அச்சத்தின் காரணமாய்ப், பாலை நிலத்தைக் கடந்து வரும் நின் கணவர்க்குத் தம் கொடுமை யைக் காட்டாவாயின. அம்மட்டோ! அவர் அவ்வழியை விரைந்து கடந்து இவண் வந்து சேருமாறு, அவ்வழியை அதற்கு ஏற்றவாறு, மழை பெய்தும், வெப்பம் தணித்தும் இயைவாக மாற்றின. அதனால் அவரும் விரைந்து வந்து சேர்ந்தனர். வாழ்க நின் கற்பு! வளர்க நும் அன்பு வாழ்க்கை!" என வாழ்த்திச் சென்றாள். “பாடின்றிப் பசந்தகண், பைதல பனிமல்க, வாடுபு வனப்புஓடி வணங்குஇறை வளைஊர; ஆடுஎழில் அழிவு அஞ்சாது அகன்றவர் திறத்து, இனி, நாடுங்கால், நினைப்பது ஒன்று உடையேன்மன், அதுவுந் தான் தொன்னலம் தொலைபுஈங்கு யாம்துயர் உழப்பத்துறந்து 5 துன்னி நம்காதலர் துறந்து ஏகும் ஆர்.இடைக் (உள்ளார் கன்மிசை உருப்புஇறக், கனைதுளி சிதறுஎன இன்னிசை எழிலியை இரப்பவும் இயைவதோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/130&oldid=822133" இலிருந்து மீள்விக்கப்பட்டது