பக்கம்:பாலைச்செல்வி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி 129 புனையிழாய் ! ஈங்குநாம் புலம்புஉறப், பொருள்வெஃகி முனைஎன்னார் காதலர் முன்னிய ஆற்றிடைச் 10. சினைவாடச் சிறக்கும்நின் சினம் தணிந்து ஈகெனக் கனைகதிர்க் கனலியைக் காமுறல் இயைவதோ? ஒளியிழாய் ! ஈங்குநாம் துயர்கூரப், பொருள்வயின் அளிஒரீஇக் காதலர் அகன்று ஏகும் ஆரிடை முளிமுதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுகென 15 வளிதரும் செல்வனை வாழ்த்தவும் இயைவதோ? எனவாங்கு, செய்பொருள் சிறப்புஎண்ணிச் செல்வர்மாட்டு, இணையன தெய்வத்துத் திறன்நோக்கித் தெருமரல், தேமொழி! வறன்ஓடின் வையத்து வான்தரும் கற்பினாள் 20 நிறன்ஒடிப் பசப்பூர்தல் உண்டுஎன; அறன்ஓடி விலங்கின்று அவர் ஆள்வினைத் திறத்தே.” தலைவன் பொருள்வயின் பிரிந்தானாக, அவன் சென்ற காட்டில், அவனுக்கு ஊறு நேராவாறு காத்தற் பொருட்டுக் கடவுளை வழிபட எண்ணிய தலைவிக்கு, அவர் நின் கற்பின் ஆற்றலால் அவ்வாறே வந்து சேர்ந்தார் எனத் தோழி கூறியது. இது. 1. பாடு-உறக்கம், பைதல-வருத்தம் உடையவாகி, 2. வாடுபு-கெட்டு, வனப்பு ஒடி-அழகு கெட்டு, வணங்கு இறை-வளைந்த முன்கை, 3. ஆடுஎழில்-பேரழகு 3. தொலைபுகெட்டு உள்ளார்-நினையாராய், 6. துன்னி-பொருள்மேல் ஆசை கொண்டு; 7. எழிலி-மேகம், இரப்பவும்-வணங்கிக் கேட்பவும், 9. புலம்பு உற-தனிமை உற்று வருந்த 10. முன்னிய-போகக் கருதிய, 11. சினை-மரக்கிளைகள்; சிறக்கும்-மிகும்; தனித்துஈக, ஒருசொல், தணிக என்பது பொருள்; 12. கனலி-ஞாயிறு, 13. துயர்கூர-துயர்மிக; 14. அளி ஒர் இ-அன்பைக் கைவிட்டு 15. முளி-உலர்ந்த புதர்;

  • பாலை-9
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/131&oldid=822134" இலிருந்து மீள்விக்கப்பட்டது