பக்கம்:பாலைச்செல்வி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ஜ் புலவர் கா. கோவிந்தன் இவ்வெண்ணங்களால், அவனைப் போக விடாது தடுத்து விடத் துணிந்த தோழி, போதற்காம் ஏற்பாடுகளை மேற்கொள்வதில் முனைந்திருந்த அவன்பால் சென்றாள். இழந்தால் மீண்டும் பெறலாகா இளமையின் இயல்பு; இளமை இழந்துவிடத் துன்பமாய் மாறிப் பயனற்றுப் போகும் வாழ்வின் இயல்பு; அவ்வின்பம் போலாது, இளமை கழிந்தவிடத்தும், மேற்கொள்ளுதற்காம் ஈகையின் இயல்பு ஆகிய இவற்றை முறையாக எடுத்துக் கூறிப் பொருள் தேடும் முயற்சியினை அப்போது மேற்கொள்ளா வாறு வேண்டிக் கொண்டாள். ஆனால், புகழ் தருவதில் பெருந்துணை புரிய வல்லதாய பொருள் தேடும் ஆர்வத்தில் ஆழ்ந்து போன அவன் உள்ளம், அவள் கூறுவனவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டது. அவள் அத்துணை கூறியும், போக்கிற்காம் வினை மேற் கொள்வதை அவன் கைவிட்டானல்லன். பொருள் கொடுத்துப் பெறும் புகழின்பால் பேராசை கொண்டிருக்கும் அவனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல், தன் அறிவுரைக்கில்லை என்பதை உணர்ந்ததும், அவள், அவனைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனும் தன் துணிவினைக் கைவிட்டாளல்லள். புகழின்பால் சென்ற அவன் உள்ளம், அவன் மனைவியின் அன்பிற்கும் கட்டுப்பட்டதே என்பதை உணர்ந்தவள் அவள். தானும், தன் மனைவியும், தன்னேரில்லாப் பெருவாழ்வு பெறுதல் வேண்டும் எனும் வேட்கையினாலேயே, அவன் பொருளிட்டி வரத் துணிந்துள்ளான்; தான் பிரியின், தன் பிரிவுத்துயர் தாளாது தன் மனைவி இறந்துபடுவள்; பொருள் தேடி மீண்டவிடத்து அவளைக் காண்டல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/14&oldid=822143" இலிருந்து மீள்விக்கப்பட்டது