பக்கம்:பாலைச்செல்வி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ 13 இயலாது; எவள் இன்ப வாழ்விற்காக இத்துணைப் பாடுபடுகின்றனனோ, அவளை இழந்துவிட நேரிடும்; அவள் அழிவிற்குத் தன் பொருள்தேடு முயற்சியே காரணமாம் என்பதை அவன் உணர்ந்துவிடின், ஒருபோதும் பிரிய எண்ணான் என்பதையும் அவள் உணர்வாள். அதனால், அவனுக்கு அறிவுரை கூறுவதை விடுத்தாள். "அன்ப! நின் மனைவி மனையறம் மேற்கொள்ளும் மனையாளின் கடமைகள் இன்னின்ன என நீ கூறிய அந்நெறியில் பிறழாது நிற்கும் கற்புடைவளேயெனினும், அவள் நின்னைப் பிரிந்து வாழ்ந்து அறியாளாதலின், நீ அவளைத் தனித்திருக்க விடுத்து, வேற்றுார் சென்றுவிடின், அவள் உயிர் வாழாள். நீ அவளை முதன் முதலாகக் கண்டு காதல் கொண்டபொழுது பிரியேன்” என்று கூறித் தேற்றிய நின் சொல் பிறழாது என்ற உறுதியினாலேயே, நின்னை வாழ்க்கைத் துணையாக வரித்துக் கொண்டுள்ளாள். அத்தகையாள், நீ, இப்போது பிரிந்து செல்வை என்பதை அறியின், உயிர் வாழாள். கணவனே எல்லாம் என்ற உணர்வினால், பிறந்த ஊரையும் பெற்ற தாய் தந்தையரையும் மறந்து வந்து வாழும் அவள் கற்பு நெறி கண்டு, உலகு புகழ் அருந்ததியாம் இவள்! என ஊரார் போற்ற வாழும் அவள், தனக்கு ஒரே பற்றுக் கோடாகக் கொண்டுள்ள உன்னை ஒருநாள் காணாளா யினும் கலங்கி உயிர் விடுவள். இதை நீ அறிதல் வேண்டும். ஆகவே, இமைப் பொழுதும் பிரியாதிருந்து இவளைப் பேணிக் காத்தல் நின் கடனாம். மேலும், நீ தேடிக் கொணரும் பொருள், இவளை இழத்தற்கு வழியாதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/15&oldid=822154" இலிருந்து மீள்விக்கப்பட்டது