பக்கம்:பாலைச்செல்வி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 ன் புலவர் கா. கோவிந்தன் அறியது போகும் நின்னை மக்கட்டன்மை உடையான் என எவரே மதிப்பர்: அன்ப! பிரிந்து போகும் உனக்கு, இறுதியாக ஒன்று கூறுகின்றேன், கேள். நீ விரும்பியவாறே பொருள் தேடச் செல், அதை யான் தடை செய்யேன். ஆனால், ஆங்குச் சென்று பொருள் தேடும் பணி மேற்கொண்டிருக்குங்கால், ஈங்கிருந்து, ஆங்கு வருவார் யாரேனும் உளரேல், அவரைக் கண்டு, 'யான் அன்பின்றி விடுத்து வந்தமையால் வருந்தி வாழும் என் மனைவியைக் கண்டிரோ? அவள் நிலையினை அறிந்திரோ? என, என்னைக் குறித்த எதையும் கேளற்க. கேட்டால், அவர் நினக்கு நற்செய்தி தாரார். என் இறந்து பாட்டினையே அவர் கூறுவர். அது கேட்கும் நீ மேற்கொண்டு சென்ற வினையை முடிக்காது, வருந்தி, வாழ்விழப்பை எடுத்த வினையை இடையிற் கைவிட்ட பெரும்பழியும் உண்டாகும். பகல் விளங்கும் ஞாயிறுபோல், உலகெலாம் போற்ற வாழ வேண்டியவன் நீ. அதையே யானும் விரும்புகிறேன்; புகழ் பெற்று வாழ வேண்டிய நீ பழியுற்று இறத்தல் கூடாது. ஆகவே, அன்ப! செல்லும் நீ சென்ற நின் வினை முடியும்வரை என்னை மறந்திருப்பாயாக. இதுவே என் வேண்டுகோள். இருந்து அன்பு காட்ட மறுக்கும் நீ, இதையாவது அருள்வையாக!” என வேண்டிக் கொண்டாள். - தன் காதலன் பிரிவுத் துயர் பொறாது கலங்கும் அந்நிலையிலும், அவள் தன் துயர் கருதி வருந்தாது, அவன் புகழ்க் கேடு கருதியே வருந்தினாள். அவன் பிரிவால், தன் உயிரை இழக்க்ப் போகும் ೨/೧ರ್೯, அந்நிலையிலும், என் இறப்பிற்குக் காரணமாகும் இவன், எக்கேடுறின் GT6&r P.” என எண்ணாது, யான் இறப்பினும், என்னை இழந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/150&oldid=822155" இலிருந்து மீள்விக்கப்பட்டது