பக்கம்:பாலைச்செல்வி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ہ பாலைச் செல்வி இ. 149 நிற்கும் அந்நிலையினும், என் இறப்பிற்குக் காரணனாகிய அவன், பழியுடையனாதல் கூடாது! என எண்ணும் அவள் உள்ளத் துய்மையை உவந்து பாராட்டுவோமாக. "செவ்விய தீவிய சொல்லி, அவற்றொடு பைய முயங்கிய அஞ்ஞான்று அவைஎல்லாம்; பொய்யாதல் யான் யாங்கு அறிகோமற்று ஐய! அகனகா கொள்ளா அலர்தலைத் தந்து பகல்முனி வெஞ்சுரம் உள்ளல்அறிந்தேன்; 5 மகன் அல்லை மன்ற, இனி; செல்; இனிச்சென்று, நீ செய்யும் வினைமுற்றி 'அன்புஅற, மாறி யாம்.உள்ளத் துறந்தவள் பண்பும் அறிதிரோ? என்று, வருவாரை என்திறம் யாதும் வினவல்; வினவின், 10 பகலின் விளங்கும் நின்செம்மல் சிதையத், தவலரும் செய்வினை முற்றாமல் ஆண்டு, ஒர் அவலம் படுதலும் உண்டு.” பிரிவுணர்த்தப்பட்ட தலைவி, நீ பிரியின் யான் இறந்து படுவன் எனக் கூறித் தலைவனைச் செலவழுங்கு வித்தது. 1. செவ்விய- நடுவு நிலைமையில் திரியாத தீவிய - இனிய, 2. அஞ்ஞான்று - களவுக்காலத்தில், 4. அகனகர் - பெரிய ஊர்: 5. பகல் - ஞாயிறு, முனிதல் - காய்தல்; உள்ளல் - கருதுதல்;5. மன்ற - உறுதியாக, 8. அற நீங்கும்படி, மாறி - மனம் வேறுபட்டு 10. என்திறம் - என்னைப் பற்றிய செய்தி, வினவல் - வினவாதே; 11. பகலின் - ஞாயிறு போல்; செம்மல் - தலைமை; 12. தவல் அரும் - கேடு அடைதல் கூடாத; 23. அவலம் - துன்பச் செய்தி, படுதல் - உண்டாகல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/151&oldid=822156" இலிருந்து மீள்விக்கப்பட்டது