பக்கம்:பாலைச்செல்வி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 கலையும் பிணையும் குறைவறப் பெய்யும் மழை உடைமையால், ஆறும் குளமும் நீரால் நிறைய, மரமும் செடியும் மல்கி, நிழலும் நிறைபயனும் தரச் சிறந்து விளங்கும் வளம் மிக்க நாட்டில் மனையறத்திற்குரிய மாண்புகளைக் குறைவறக் கொண்ட ஒருத்தியை மணந்து, மகிழ்ந்து வாழ்ந்திருந்தான் ஓர் இளைஞன். அவன் அருகில் இருந்து அன்பு செய்ய, வருவார்க்கு விருந்தளித்தல் முதலாம் மனையறக் கடமைகளை மகிழ்ந்து செய்து வாழ்ந்தாள் அப் பெண். இவ்வாறு அவர்கள் இல்லற வாழ்க்கை இனிது நடை பெற்று வருங்கால், ஒரு நாள், அவன், தன்னையொத்த ஏனைய இளைஞர்களைப் போன்றே, பொருளிட்டி வர விரும்பினான். பொருள் விரும்புவார், அப்பொருள் தாம் பிறந்த நாட்டில் பெரும் அளவில் இல்லாமையால், வெளி நாடுகட்குச் சென்றே ஈட்டி வந்த காலம் அந்தக் காலம். அதனால், அவ்விளைஞனும் வெளிநாடு போதற்கு வேண்டிய ஏற்பாடுகளை மேற்கொள்ளத் தொடங்கினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/152&oldid=822157" இலிருந்து மீள்விக்கப்பட்டது