பக்கம்:பாலைச்செல்வி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 151 அந்நிலையில் அதை அறிந்து கொண்டாள், அவன் மனைவி. பொருளின் இன்றியமையாமையினை அவளும் உணர்வாள். அதனால், அவன் அது குறித்துப் போவதைத் தடுத்திலள். ஆனால், மனையற வாழ்வு மாண்புற வேண்டின், தம் வாழ்வில் செல்வம் கொழிக்க வேண்டும் என்பதை அறிந்த அவள், இவனைப் போக விடுத்துத் தன்னால் தனித்திருந்து வாழ்தல் இயலாது என்பதையும் உணர்ந்தாள். அதனால், அவன் போதற்கு இசைவாள், தன்னையும் உடன் கொண்டு போகுமாறு வேண்டிக் கொண்டாள். அவள் வேண்டுகோள் கேட்டு அவன் கலங்கினான். அவளை உடனழைத்துச் செல்ல விரும்பாமையன்று அதற்குக் காரணம். அவளையும் உடன் கொண்டு செல்வதில் அவனுக்கும் மகிழ்ச்சியே. அவள் உடன்வரின் அவளைப் பற்றிய கவலை, அவன் கருத்தினின்று ஒழிவதால், எடுத்த காரியமே கருத்தாய் நின்று, அதை விரைவில் முடித்தலும் கூடும். அதனால், அவளை அழைத்துச் செல்ல அவனும் விரும்பினான். ஆனால், அவர்கள் கடந்து செல்ல வேண்டிய நாடு, தன்னையொத்த ஆடவர்க்கும் கடத்தற்கு அருமை வாய்ந்தது. வளம் கொழிக்கும் விளை நிலங்களெல்லாம் வறண்டு, தம் பயன் குன்றுமாறு, ஞாயிறு நின்று காயும் கோடை காலம் அவன் செல்லும் காலம். கோடையின் கொடுமையால், உணவும் உண்ணுநீரும் பெறாது வருந்திய காட்டு யானைகள் அனைத்தும், ஒன்று சேர்ந்து வரினும், அவற்றிற்கு அவை வேண்டுவனவற்றை அளித்துப் புரக்க வல்ல பெருவளம் பொருந்திய மலைகளும், தம் பயன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/153&oldid=822158" இலிருந்து மீள்விக்கப்பட்டது