பக்கம்:பாலைச்செல்வி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 ல் புலவர் கா. கோவிந்தன் விளமையும் அழியும். மேலும் அன்ப! மரத்தின் நிழல் மனத்திற்கு மகிழ்ச்சி தரும்; மகிழ்ச்சி தரும் அம் மரநிழல் ஆங்கு இல்லை என்று கூறுகின்றனை. ஆனால், அன்ப! எனக்கு மகிழ்ச்சி தருவது அம்மர நிழலன்று. அம் மரங்கள் மிக்க ஈங்கு என்னை விட்டுப் பிரியின், மரத்து நிழலில் வளரும் மரம் செடி கொடிகள் வளம் கெட்டு நிறம் இழத்தல் போல், யானும் பசலை பெற்றுப் பொலி விழப்பள்; அவ்வாறு என்னை அழிய விடாது, காக்க வல்லது நின் தாள் நிழலே, நின்னை விட்டுப் பிரியாதிருக்கச் செய்யும் நின் அருளே. அம்மர நிழலன்று. ஆகவே, அன்ப! என்னையும் உடனழைத்து செல்க!” என்று கூறி வேண்டிக் கொண்டாள். அவள் அத்துணை வேண்டிக் கொண்ட பிறகும், அவளை அழைத்துச் செல்ல அவன் உள்ளம் அஞ்சிற்று. அத்துணைக் கொடுமை மிக்கது அக்காடு; அதனால், அவள் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளாதே, "என் ஆருயிர்க் காதலி! காடு அடுக்கடுக்கான மலைகள் போலும் கற்களைக் குவியல் குவியல்களாக, ஆங்காங்கே கொண்டிருக்கும். அம் மலைக் காட்டைக் கடந்து செல்வார், நுழைந்து நுழைந்து செல்ல வேண்டி யிருத்தலின், தனித்துச் செல்வார்க்கும் அதைக் கடந்து செல்லுதல் அரிதாம். எய்த அம்பும் ஒடிப் பாயாது, வழியடைத்துக் கிடக்கும் கற்களிற் பட்டு ஒடிந்து வீழும் அக் காட்டு வழியில், உன்னை எவ்வாறு அழைத்துச் செல்வேன்?” என்று கூறி வருந்தினான். அவன் அவ்வாறு கூறக் கேட்டும் அடங்கி விடாது, "ஐய! அம்பு ஒடா அருமையுடையது எனக் கூறும் நீவிர், அக்காட்டில், &63)|6U ஒட, அக் கலையினைப் பிரியாது பின் தொடர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/156&oldid=822161" இலிருந்து மீள்விக்கப்பட்டது