பக்கம்:பாலைச்செல்வி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 155 ஒடும்பிணையும் உண்டே அதைக் கண்டிலிர்கொல்லோ? காட்டின் கொடுமையால், பிணை கலையைப் பிரிந்து கலங்கி நிற்கும் காட்சியை யாண்டேனும் கண்ட துண்டோ? காட்டில் வாழும் இயல்பினவேனும், பிணை கலையைப் பிரியாப் பண்பு வாய்ந்துள்ளது. அப்பண்பு, நாகரிகம் அறிந்த நாட்டில் வாழும் என்பாலும் இருக்கும் என்பதை மறவற்க, ஆனால், காட்டின் தொடுமை கருதிப், பிணையைப் பிரிந்து போய்விடாது, உடனிருந்து அழைத்துச் செல்லும் அக் கலையின் பண்பு, அக் கலையும் பிணையும் கலந்து வாழக் கண்ட நும்பால் பொருந்த வில்லையே என்றே யான் வருந்துகின்றேன்!” என்று கூறி வருந்தினாள். “பல்வளம் பகர்பு ஊட்டும் பயன்நிலம் பைதறச் செல்கதிர் ஞாயிறு செயிர்சினம் சொரிதலின், தணிவில்வெம் கோடைக்குத் தண்நயந்து அணிகொள்ளும் பிணிதெறல் உயக்கத்த பெருங்களிற்று இனம்தாங்கும் மணிதிகழ் விறன்மலை வெம்ப மண்பகத் 5 துணிகயம் துகள்பட்ட தூங்கழல் வெஞ்சுரம்; "கிளிபுரை கிளவியாய்! நின்னடிக்கு எளியவோ? தளிஉறுபு அறியாவே காடு எனக்கூறுவீர்; வளியினும் வரைநில்லா வாழும்நாள் நூம்ஆகத்து அளிஎன உடையேன் யான் அவலங்கொண்டு அழிவலோ? 10 'ஊறுநீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய்! நீ உணல்வேட்பின் ஆறுநீர்இல் என அறன்நோக்கிக் கூறுவீர்! யாறுநீர் கழிந்தன்ன இளமைநும் நெஞ்சுஎன்னும் தேறுநீர் உடையேன்யான் தெருமந்து ஈங்குஒழிவலோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/157&oldid=822162" இலிருந்து மீள்விக்கப்பட்டது