பக்கம்:பாலைச்செல்வி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நின் இன்று வாழாள் கடமை உணர்ச்சிகளில் வழுவாத காளை யொருவன், ஒரு நாள், ஒரு பெண்ணைக் கண்டு காதல் கொண்டான். தன் காதலுக்கு உரியன் அவன் என உணர்ந்து அவளும் அவனைக் காதலித்தாள். ஆயினும், அவன் கடமை யுணர்ச்சி மிக்கவன், மேலும் புதியன், அதனால், என்றேனும் ஒரு நாள் தன்னைத் தனியே விடுத்துப் பிரிந்து விடுவனோ என அஞ்சினள் அப் பெண். அஃதறிந்தான் அவன். அவள் அண்மையிற் சென்று. அன்போடு, நெற்றியிற் படர்ந்து வீழ்ந்திருக்கும் அவள் தலை மயிரைக் கோதியவாறே, "உன்னைப் பிரிந்தால் என் உயிர் வாழாது. ஆதலின், உன்னை விட்டு இமைப் பொழுதும் பிரியேன். இது உறுதி. ஆகவே, பிரிந்து விடுவனோ என அஞ்சற்க!" எனக் கூறித் தேற்றினான். சின்னாட்களில், அவர்கள் திருமணம் சிறப்புற நிகழ்ந்தது. மனையற வாழ்வில் மகிழ்ந்தனர் அவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/159&oldid=822164" இலிருந்து மீள்விக்கப்பட்டது