பக்கம்:பாலைச்செல்வி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 இ. புலவர் கா. கோவிந்தன் மேலும் சில நாட்கள் இவ்வாறே சென்றன. ஒரு நாள், கடமை யுணர்ச்சி அவன் கருத்தைக் கவர்ந்தது. பொருள் ஈட்டிவரத் துணிந்தான் அவன். துணிந்தவன் அதைத் தன் மனைவியைக் கண்டு, காதலிக்கத் துணை புரிந்து, அந்நாள் முதலாகத், தங்கள் வாழ்க்கையோடு பிரிவறியாப் பெருந் தொடர்பு கொண்டு வாழ்பவளாய தோழிக்கு உணர்த்த விரும்பினான். உடனே அவளை அழைத்துக் "காட்டில் பிடியொடு பிரிவறியாப் பெருவாழ்வு வாழ்ந்த களிறுகள், தம் பிடிகளை மறந்து, பிரிந்து வந்து காக்கும் நம் நாட்டின் எல்லைகளைக் கடந்து போய்ப் பொருளிட்டி வருதல் வேண்டும் என என் நெஞ்சம் வற்புறுத்துகிறது. அதன் ஆணையை மீறுதல் அறமாகாது. இதற்கு என் செய்வேன்? என்றான். காட்டில் பிடியொடு வாழும் இயல்பினவேனும், அவ்வாழ்க்கையைக் காட்டிலும், பிரிந்து வந்து நாட்டைக் காத்து நிற்பதிலேயே பெருமை யுளதாகக் கருதும் களிறுகள் போல், யானும் மனைவியோடிருந்து வாழும் வாழ்க்கையில் மகிழ்ச்சியுளது எனினும், பிரிந்து போய்ப் பொருளிட்டி வாழும் வாழ்விலேயே பெருமை யிருப்பதாகக் கருதுகிறேன். அவ்வாறு, யான் கருதுகிறேன். எனினும், அதைக் கூற, எந்நா, அவள்பால் கொண்ட அன்பின் காரணமாக அஞ்சுகிறது. ஆகவே, என் நெஞ்சு கருதுகிறது’ என அந் நெஞ்சுமீது பழி போட்டான். . . அவன் கூறிய சொல்லின் பொருள் வழியே, அவன் கடமை யுணர்ச்சியையும், காதல் பெருமையையும் கண்டு மகிழ்ந்த தோழி, அதை அவன் அறியக் காட்டிக் கொள் ளாது, மாறாக, அவன்பால் கடுஞ்சினம் உடையாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/160&oldid=822166" இலிருந்து மீள்விக்கப்பட்டது