பக்கம்:பாலைச்செல்வி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 159 போல், அவனைப் பார்த்து, "அன்ப! பிரியேன், பிரியின் உயிர் தரியேன்! என்ற சொற்களை, அன்று கூறியவனும் நீ பொருள் தேடிப் பிரிதல் வேண்டும் என என் நெஞ்சு கூறுகிறது, என இன்று கூறுபவனும் நீ அதையும் நீயே கூறினாய்; இதையும் நீயே கூறுகின்றனை. இவ்விரண்ட னுள் உண்மை எது? பிரியேன் என்ற அதுவா? பிரியக் கருதுகிறது என் நெஞ்சம் என்ற இதுவா? இவ்வாறு முன்பின் முரண்படக் கூறும் மனத்தெளிவற்றவனே! இப் போது, யான் கூறுவனவற்றையும் கேட்டு, மனம் தெளிந்து, பின்னர் நீ கருதுமாறு செய்க. இவர் சிறந்தவர்; ஆகவே இவரோடு சேர்ந்து வாழலாம்! இவர் பிழையுடையர்; ஆகவே இவர்பால் பொருந்தாது அகல்வாம்! என அவரவர்தம் தகுதி-தகுதியின்மைகளை அறிந்து அடையும் ஆற்றல், நீ தேடிச் செல்லும் செல்வத்திற்கு இல்லை. அது ஒருவர், இப்பிறவியில் பெற்றிருக்கும் தகுதி தகுதியின்மை களை நோக்காது, அவர் முற்பிறவியில் செய்த நல்வினை தீவினைகளுக்கேற்ப சேர்ந்தும் சேராதும் செல்லும். இப் பிறவியில் தீயோராய் வாழினும், அவர்க்கு முற்பிறவியின் நல்வினை உண்டேல், அவர்பால் அது அளவிறந்து சேர்ந்து வாழும். ஒருவர், இப்பிறவியில் நனிமிக நல்லோ ராய் வாழினும், அவர்க்கு அம் முற்பிறவி நல்வினை இன்றேல், அவர்பால் அச் செல்வம் அணுகுவதும் செய்யாது. அத்தகைய இழிந்த இயல்புடையது செல்வம். அம்மட்டோ! ஒரு காலத்தே, ஒருவரை, அவர் செய்த நல்வினை காரணமாகச் சேர்ந்து வாழ்ந்த செல்வம், அவர்க்கு அந் நல்வினைப் பயன் அற்ற அப்பொழுதே, அவரை வருந்த விடுத்துப் பிரிந்து போய்விடும் பிழைநெறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/161&oldid=822167" இலிருந்து மீள்விக்கப்பட்டது