பக்கம்:பாலைச்செல்வி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 இ. புலவர் கா. கோவிந்தன் யும் உடையது. அத்தகையள் அல்லள் நின் மனைவி. நின்னைப் பிரிந்து, அவள் ஒர் இமைப் பொழுதும் உயிர் வாழாள். என்றும் இணை பிரியாது வாழ நினைக்கும் இவளை மறந்து-மூங்கில் போலும் மென்மையும் அழகும் மிக்க இவள் தோள் இன்பத்தை வெறுத்து, எவரிடத்தும் நிலைத்து வாழும் இயல்பற்ற பொருளைத் தேடி, அதன் பின் ஒடும் நின் பேதைமையினை என்னென்பது! பெருமையை விடுத்துச் சிறுமையைக் கைப்பற்றத் துடிக்கும் நின் அறியாமை அகல்க. அவளைப் பிரிய எண்ணாது, அவளோடு கூடி வாழ்க!” என்று கூறினாள். "பால்மருள் மருப்பின், உரல்புரை பாவடி ஈர்நறும் கமழ்கடாஅத்து இனம்பிரி ஒருத்தல் ஆறுகடி கொள்ளும் வேறுபுலம் படர்ந்து, பொருள்வயின் பிரிதல் வேண்டும் என்னும் அருளில் சொல்லும் நீசொல் லினையே! 5 நன்னர் நறுநுதல் நயந்தனை நீவி 'நின்னிற் பிரியலென், அஞ்சல்ஒம்பு' என்னும் நன்னர் மொழியும் நீமொழிந் தனையே! அவற்றுள், யாவோ, வாயின? மாஅன் மகனே! கிழவர் இன்னோர் என்னாது, பொருள்தான் 10 பழவினை மருங்கின், பெயர்புபெயர்பு உறையும்; அன்ன பொருள்வயின் பிரிவோய்! நின்இன்று இமைப்புவரை வாழாள் மடவோள் . அமைக்கவின் கொண்ட தோளினை மறந்தே." தலைமகனால் பிரிவுணர்த்தப்பட்ட தோழி, களவுக் காலத்தில் அவன் கூறிய சூளுரை, பொருளின் நிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/162&oldid=822168" இலிருந்து மீள்விக்கப்பட்டது