பக்கம்:பாலைச்செல்வி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 161 யாமை, தலைவியின் ஆற்றாமை முதலாயின கூறிச் செலவு மறுத்தது. 1. பால்மருள் - வெண்ணிற மிகுதி கண்டு பாலும் மயங்கும்; மருப்பு - யானைக்கொம்பு, 2. ஈர்நறும் கமழ்கடாம் - ஈரமும், நாறும் மணமும் கொண்ட மதநீர், ஒருத்தல் - யானைத் தலைவன்;3. ஆறு கடிகொள்ளும் - வழியைக் காவல் புரியும், 5. நன்னர் நறுநுதல் - நன்மையை உடைய நல்ல நெற்றி, நீவி - கையால் தடவிக் கொடுத்து, 7. அஞ்சல் ஓம்பு - அஞ்சுதலைக் கைவிடுக; 8. நன்னர்நன்மை அமைந்த,9. வாயின - உண்மை உடையன; மாஅன்மகன் - மயக்கத்தைஉடைய மகனே; 10. கிழவர் - தனக்கு உரியார், 11. மருங்கில் - காரணமாக, பெயர்பு பெயர்பு - மீண்டு மீண்டு மாறி மாறி, 12. நின் இன்று - உன்னை இல்லாமல்; 13. இமைப்புவரை - இமைப்பளவும், 14 அமைக்கவின் - மூங்கிலின் அழகை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/163&oldid=822169" இலிருந்து மீள்விக்கப்பட்டது