பக்கம்:பாலைச்செல்வி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 163 போல், ஒளி விடுமாறு வாரி, ஐவகை வனப்பும் அமைய முடித்த உன் கூந்தலின் அழகே அழகு! குளத்திற்கு அணி செய்யும் தாமரையின் முற்றாத இளைய முகைபோல், நின் மார்பில் முளைத்தெழுந்த இளங்கொங்கைகளின் எழிலே எழில்!” என, இவ்வாறெல்லாம் அவள் நலங்களை நாவாரக் கூறிப் பாராட்டி நயந்து மகிழ்ந்தான். அவளும், அவ்வாறு பாராட்ட, அது கேட்டுப் பெருமிதம் அடைந்து பேரின்பம் உற்றாள். அவர்கள் இல்லற வாழ்க்கை இந் நெறியில் இனிதே நடைபெற்று வந்தது. சில ஆண்டுகள் கழிந்தன. அவர்களும் ஆண்டால் முதிர்ந்தனர். ஆண்டின் முதிர்வால் அவள் உடலும் சிறிதே தளர்ந்தது. அம்முதிர்ச்சி அவள் உடல் உறுப்புக்களிலும் புலனாகத் தொடங்கிற்று. பற்களுள் ஒரு சில தேய்ந்து, தம் பண்டை வனப்பை இழந்தன. கூந்தல் இயற்கை அழகினை இழந்து விட்டமையால், அதற்குச் செயற்கை எழிலூட்டும் சில ஒப்பனைகளை வலிந்து மேற்கொள்ள வேண்டியதா யிற்று, தாமரை முகையெனத் தோன்றிய கொங்கைகள் சற்றே தளர்ந்து தோன்றின. ஆண்டின் முதிர்வால், காதல் இன்பம், அவனுக்கும் ஒரு சிறிது தெவிட்டிற்று. அதுகாறும் அடங்கியிருந்த பொருளாசை, அந்நிலை நோக்கி, அவன் உள்ளத்தில் மீண்டும் வேர்விடத் தொடங்கிற்று. அதனால் பொருள் ஈட்டி வரும் கருத்துடையவனாகி, அப்பொருள் கிடைக்கும் வெளிநாடுகட்குப் போகத் திட்டமிட்டான். அஃதறிந்தாள் அவன் மனைவி. மணம் கொண்ட நாள் முதலா அவனை அவள் பிரிந்தறியாள். அதனால், அவன் பிரிவன் என்பதறிந்து பெரிதும் வருந்தினாள். அவ்வருத்தம் அளவிறந்து பெருகலாயிற்று. அவ் வருத்த மிகுதியால் அவள் இறந்து விடுவளோ என அஞ்சினாரும் உளர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/165&oldid=822171" இலிருந்து மீள்விக்கப்பட்டது