பக்கம்:பாலைச்செல்வி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 ல் புலவர் கா. கோவிந்தன் அந்நிலை அறிந்தாள் அவள் தோழி. பொருள் தேடிச் செல்லும் அவனைத் தடுத்து நிறுத்தினாலல்லது செல்லும் அவள் உயிரைக் காப்பாற்றுதல் இயலாது என்பதை உணர்ந்தாள். அதனால், பொருள் வேட்கை உடைய னாய்ப் பிரிந்து போகக் கருதி நிற்கும் அவன்பால் சென்றாள். சென்று, "ஐய! யான் கூறுவன சில உள. அவற்றைச் சிறிது கருத்துான்றிக் கேட்குமாறு வேண்டிக் கொள்கிறேன். கடன் வாங்கி உயிர் வாழ்வார், அக்கடன் கொடுப்பார் முன், அக் கடனைப் பெறுங்கால் நிற்கும் நிலை வேறு. அப்போதைய அவர் முகத் தோற்றமே வேறாம். தாயைக் காணும் சேய்களின் முகம்போல் மலர்ந் திருக்கும் அப்போது. ஆனால், கடன் தந்தவர், தாம் தந்ததைத் தருமாறு கேட்குங்கால், கடன் பெற்றவர் நிற்கும் நிலையே வேறு. அந்நிலையில் அவர் முகம், பேயைக் கண்டார் முகம் போல், பேதுற்றுத் தோன்றும் இது உலகியல். இன்று மட்டும் காணக் கூடியதன்று. உலகம் தோன்றிய நாள் முதலாக இதுவே நியதி. உலகில் பிறந்தார் அனைவர்க்கும் ஒத்த இயல்புடையதாய அப்பண்பு, நின்பாலும் இருப்பதில் வியப்பில்லையன்றோ? ஆதலின், நல்ல மலர்களில் உள்ள நறுந்தேனைத் தேடிச் சென்று உண்ணும் வண்டே போல், மகளிரின் நலத்தை, அம் மகளிரைத் தேடிச் சென்று நுகரும் நீ, அம்மகளிர் மகிழு மாறு அவரைப் பலப்பல கூறிப் பாராட்டி நலம் நுகர்ந்து விட்டு, இப்போது பொருள் மேற்கொண்ட வேட்கை மிகுதியால், அவரை மறந்து போவதோடு அமையாது, அவர்க்கு இறப்பையும் தந்து செல்லும் நின் செயல் கண்டு, ஒரு காலத்து உனக்கு வேண்டியவராய் வாழ்ந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/166&oldid=822172" இலிருந்து மீள்விக்கப்பட்டது