பக்கம்:பாலைச்செல்வி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 165 இப்போது வேண்டாதாராகிய நாங்கள் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆயினும், ஐய! ஒன்று மட்டும் கூற விரும்புகின்றேன். ஒவியம் வல்லான் ஒருவன், உள்ளம் உவந்து ஆக்கிய ஒவியத்தின், தன் உயிரையே அளித்து ஆக்கிய ஓவியத்தின் உயிர்ப்புத்தன்மையும், அதன் அழகும் அருமையும், அவ்வோவியம் அழியுங்காறும் அழியாது நிற்கும். அதேபோல், நல்லவர்கள் ஒரு காலத்தே, உள்ளம் உவந்து கூறிய ஒரு சொல், அவர் இறக்கும் வரையிலும் அழியாது நிற்கும். அவர், அச்சொல்லைத் தாம் இறக்கும் வரையும் காத்துக் கிடப்பர். அந் நற்பண்பு நின்பாற் பொருந்தக் காணேம். அன்று இவள் இளமை அழகு உன் காம உணர்ச்சிக்கு உரம் ஊட்டிற்று. அதனால், அவ் வழகைப் பலவாறு பாராட்டி மகிழ்ந்தாய். அவ்வழகு கெடாது இருந்தவரை, அவளைப் பிரியாது இருந்து, அவள்நலம் நுகர்ந்தாய்; இன்று, அவள்பால் அப்பண்டை அழகு இல்லை; இளமையும் அவளை விட்டு அகன்று விட்டது. ஆகவே, பிரியேன் என அன்று கூறிய நின் ஆணையையும் அழித்து விட்டுப் பிரிந்து போகின்றனை. அன்ப! பேரொளி வீசும் பொன்னின் நிறத்தை வெல்லும் இவள் மாமை நிறம் மங்கிப் போமாறு, இவளைப் பிரிந்து, ஞாயிறு நின்று காயும் கொடுமைமிக்க பாலைக் காட்டைக் கடந்து போக எண்ணுகின்றனை. நின் நலம் நுகரும் நல்வினை அற்றுப் போனமையால், நின்னைப் பிரியா திருக்கப் பெற்று, அந்நலன் நுகர மாட்டாது வருந்தும் இந் நிலையில், நின்னைப் போக விடாது தடுத்து நிறுத்தவல்ல நன்மைகள் எதுவும் எம்பால் இல்லை. ஆதலின் உன்னைப் பிரிய விடுத்து, அப்பிரிவுத் துயரால் பிறவாப் பெருநிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/167&oldid=822173" இலிருந்து மீள்விக்கப்பட்டது