பக்கம்:பாலைச்செல்வி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சூடி எறிந்த மலர்! ஒரு பொருள் தனக்குரிய இயல்பை இழக்காமல் இருக்கும்வரையே, அது மக்களால் போற்றப்படும்; பேணிப் பெருமை செய்யவும் படும். அது, அவ்வியல்பை இழந்து விடின், அந்நிலையே, அது கழித்து ஒதுக்கப் பெறும்; இழித்துப் பழிக்கப் பெறும். இவ்வுண்மையை உலகினர்க்கு உணர்த்த விரும்பிய புலவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ, தம் புலமை நலத்தால் ஒரு பெண்ணைப் படைத்து, அவளைப் பேரறிவுடைய ளாக்கி, அவள் வாய்ச் சொல் வழியே அதை உணர்த்தியுள்ளார். உலகியல் உணர்ந்தவள் ஒரு பெண். ஊரின் இயல்பு இது, அவ்வூர்வாழ் மக்களின் இயல்பு இது, மரம் செடி கொடிகளின் இயல்பு இது என உணர்ந்தவள். உலகியல் நிகழ்ச்சிகள் பலவற்றைத் தானே நேரிற் கண்டும், அஃதறிந்தார் கூறுவன கேட்டும் பெற்றுப் பரந்த பேரறி வுடையளாய் விளங்கினாள் அப்பெண். அவள் பேரழகும் உடையளாதல் அறிந்து, அவளை விரும்பி மணந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/170&oldid=822177" இலிருந்து மீள்விக்கப்பட்டது