பக்கம்:பாலைச்செல்வி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 169 கொண்டான் ஓர் இளைஞன். அவளும் அவன்பால் பேரன்புடையளாயினள். இருவரும் இல்லற வாழ்க்கை மேற்கொண்டு இனிது வாழ்ந்திருந்தனர். அவள்பால் பெறலாகும் பேரின்பங்களைத் தன் உள்ளம் வெறுக்கு மளவு நுகர்ந்தான் அவனும், சின்னாட்கள் சென்றன. ஒரு நாள், பொருள் தேடி வருதல் ஆடவர் கடமை என அறிந்து, அப் பொருளிட்டி வர வெளிநாடு செல்ல விரும்பினான். புகழ் பெறுவான் வேண்டிப் பொருள் தேடிச் செல்லத் துணிந்துள்ளான் கணவன் என்பதை அவள் அறிந்து கொண்டாள். அவன் பிரியின், தன்னிலை தாழும். கணவன் உடனிருந்து வாழும் வாழ்வே, மனைவிக்கு உயிர் ஊட்டுவதாகும். அவனோடு வாழாத வாழ்வு, வாழ் வாகாது. அறவோர்க்களித்தல் முதலாம் இல்லறப் பயன், அவன் உடன் இருக்கும்பொழுதே உண்டாம். அவன் இல்லாவிடத்து, அவ்வில்லறம் பயன்தராது. அவள்மட்டும் இருந்து வாழும் இல்லறம், இல்லறம் என அழைக்கவும் உரிமையற்றதாகி விடும் என்ற இல்லற இயல்பு உணர்ந்த அவள், அவன் பிரிவு கேட்டுப் பெரிதும் வருந்தினாள். அத்தகைய நிலை ஒன்று வந்து வாய்த்து, அதை ஊரார் உணரும் வாய்ப்பும் கிடைக்குமாயின், அவ்வூரார், வழுக்கிய தன் நிலை கண்டு எள்ளி நகைப்பரே என எண்ணி வருந்தினாள் பின்னர் வருந்திப் பயனில்லை; அவ் வாட்டத்தைத் தவிர்க்க வழி தேடுவோம் எனத் துணிந்தாள். - - - - அவ்வாறு, துணிந்தவள். உடனே தன் கணவன்பாற் சென்று, "காதல! நீர் வேட்கையுற்ற மக்கள், அந்நீரை உண்டற்குரிய உண்ணுநீர்க் கலங்களைப் பெற இயலாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/171&oldid=822178" இலிருந்து மீள்விக்கப்பட்டது