பக்கம்:பாலைச்செல்வி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 போயின்று சொல் என் உயிர்! காதலும் கடமையும் ஒத்த சிறப்புடைய. காதலை விடக் கடமை பெரிதன்று. கடமையை விடக் காதல் பெரிதன்று. காதல் பால் ஒருவர்க்கு எவ்வளவு பற்றுண்டோ, அவ்வளவு பற்று, கடமை மாட்டும் உள வாதல் வேண்டும் எனக் கருதும் உயர்ந்த உள்ளம் வாய்க்கப் பெற்றவன் ஓர் இளைஞன். கணவனே எல்லாம்; அவனே தன் உயிர்; அவனைப் பிரிந்து வாழ்தல் பெண்டிர்க்கு இயலாது; இயலாது என்பது மட்டுமன்று, அது கூடாது; அவனைப் பிரிந்து வாழும் நிலை வந்து வாய்க்குமாயின், அந்நிலையே உயிர் விடுதலே, உண்மைக் காதல் உடைய உயர்குல மகளிரின் உயர்ந்த ஒழுக்கமாம், எனக் கருதும் உள்ளம் உடையாள் ஒரு பெண். இவ்விரு வரும் எவ்வாறோ, ஒருவரை யொருவர் அறிந்து, அன்புடையராகி, மணந்து மனையறம் மேற்கொண்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/176&oldid=822183" இலிருந்து மீள்விக்கப்பட்டது