பக்கம்:பாலைச்செல்வி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 ல் புலவர் கா. கோவிந்தன் இன்றியமையாமை உணர்ந்து, பிரியத்துணிவதும், பிரியின் இவள் வருந்துவளே எனும் கவலையால் அப் போக்குத் தவிர்வதுமாகக் கிடந்த அந் நினைவோடே உறங்கச் சென்றவனாதலின், அவன் வாய் அச் சொற்களையே கூறின. அவன் உள்ள உணர்வை அவன் வாய் உணர்த் திற்று. "நீர் வேட்கையுற்ற யானை, ஆங்குக் காணும் பேய்த் தேரின் பின் ஒடும் பாலை வழியைக் கடந்து சென்று பொருளிட்டி வருமளவும், ஈங்குத் தனித்திருந்து வருந்தாது வாழ்தல், இவளுக்கு இயலுமோ? நாங்கள் மேற்கொண்ட இல்வாழ்க்கை இடையறவு படாது இனிது நடைபெறுங் கொல்?” என்ற சொற்களை அவன் வாய் அவனை அறியா மலே அரற்றி விட்டது. அது கேட்டாள் அப் பெண். எது நிகழும் என அஞ்சினாளோ அது நிகழ்வது உறுதி. அவன் பிரிந்து போதல் தவறாது என்பதறிந்தாள். அவள் துயர் மிகுந்தது. பொழுது புலரும்வரை புலம்பினாள். காலையில் அப் பெண்ணைக் கண்ட அவள் தோழி, அவள் கண்ணின் நிலை அழிந்து, கலங்கியது ஏன்? என வினவினாள். அவளை எதிர்நோக்கியிருந்த அப் பெண், அவளைக் கண்டவுடனே, கண்களில் நீர் மல்க நின்று கலங்கிக் கடுந்துயர் உற்றாள். பின்னர் ஒருவாறு தேறித், தோழி! உள்ளம் நடுங்கும் ஒரு செய்தியைக் கேட்டு, அச் செய்தி உண்மையோ, பொய்யோ என ஐயுற்று, அது நம்பால் நிகழ்ந்து விடுமோ என அஞ்சியவிடத்து, அவ் வச்சம் உண்மையாகி, அவ்வாறு அஞ்சினாரைத் துயர்க்கு உள்ளாக்கும் என உலகத்தார் உரைப்பர். அவ்வுரை உண்மையாதலைத், தோழி! இன்று யான் உணர்ந்து கொண்டேன்," என்று கூறிச் சின்னாட்களாகத் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/178&oldid=822185" இலிருந்து மீள்விக்கப்பட்டது