பக்கம்:பாலைச்செல்வி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 177 கணவன் தன்பால் நடந்துகொள்ளும் புதுமை, அப் புதுமை கண்டு தான் அஞ்சிய அச்சம், அவன் கனவில் அரற்றியது ஆகியவற்றைக் கூறித், "தோழி! நம் கணவர், அவர் கருதியவாறு பொருள் தேடிப் போயின. பின்னர், உயிர்கொண்டு வாழ்தல் நம்மால் இயலுமோ? அவர் பிரிந்து போகத் தனித்திருந்து வாழும் ஆற்றலும் நமக்கு உளதோ? அவ் வாற்றலை ஒருவாறு பெற்று உயிர் வாழினும், 'இவள் கணவன், இவளை விட்டுப் பிரிந்து போயது, இவளிடத்து அவனுக்கு அன்பில்லாமையால் போலும்! என இவ்வூர் வாழ் இழிமக்கள் கூறும் சொல் கேட்டு உயிர் வாழ்தல் எவ்வாறு இயலும்? அது நம்மால் இயலாது. அவர் பிரியின், நம் உயிரும் அவரோடே போய்விடும். இது உறுதி. ஆகவே, தோழி! அவர்பால் சென்று, உன் பிரிவுச் செய்தி கேட்ட இந்நிலையே, அவள் உயிர் அவளை விட்டுப் பிரிந்தது!’ என அறிவித்து விடுவாயாக!” என்று கூறி வருந்தி வாடினாள். 'நெஞ்சு நடுக்குறக் கேட்டும், கடுத்தும், தாம் அஞ்சியது ஆங்கே அணங்காகும் என்னும்சொல் இன்தீம் கிளவியாய்! வாய்மன்ற நின்கேள்; புதுவது பன்னாளும் பாராட்ட, யானும் 'இதுஒன்று உடைத்து என எண்ணி, அதுதேர, 5 மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள், - பாயல்கொண்டு என்தோள் கனவுவார்; 'ஆய்கோல், தொடிநிரை முன்கையாள், கையாறு கொள்ளாள், கடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ?. இடுமருப்பு யானை, இலங்கு தேர்க்கு ஒடும் 10 நெடுமலை வெஞ்சுரம் போகி, நடுநின்று Lissonay-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/179&oldid=822186" இலிருந்து மீள்விக்கப்பட்டது