பக்கம்:பாலைச்செல்வி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 இ. புலவர் கா. கோவிந்தன் செய்பொருள் முற்றும் அளவு என்றார்; ஆய்இழாய்! தாமிடை கொண்டது அதுவாயின், தம்மின்றி யாம்உயிர் வாழும் மதுகை இலேமாயின், தொய்யில் துறந்தார் அவர்எனத் தம்வயின் 15 ஒய்யார் நுவலும் பழிநிற்பத் தம்மொடு போயின்று சொல்என் உயிர்.” தலைவன் செயல்கண்டு, பிரிவன் என ஐயுற்ற தலைவி, அவன் கனவில் அரற்றினமையால், பிரிவன் எனத் துணிந்து, ஆற்றாளாய்த் தோழிக்கு உரைத்தது. 1. கடுத்தும் - ஐயுற்றும், 2. அணங்கு - வருத்தம், 3. வாய் மன்ற - உறுதியாக உண்மை, நின் கேள் - உன் உறவினனாய தலைவன்;5. தேர- ஆராய, 6. மணந்த - புணர்ந்த, 7. கனவுவார்கனவு காண்பார்; கோல் - சித்திர வேலைப்பாடு; 8. கையாறு - ஒன்றை இழந்து துயர்உறல்; கொள்ளாள் - கொள்ளாளாய்; 10. இடுமருப்பு - குத்தும் கொம்பு தேர் - பேய்த்தேர்; செய்பொருள் முற்றுமளவு ஓம்பவல்லுவள்கொல் என மாற்றுக. 14. மதுகை - ஆற்றல்; 10. ஒய்யார்- இழிமகளிர் 17. போயின்று என் உயிர், சொல் என மாற்றுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/180&oldid=822188" இலிருந்து மீள்விக்கப்பட்டது