பக்கம்:பாலைச்செல்வி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 இ. புலவர் கா. கோவிந்தன் நீ பிரியாது கூடியிருக்குங்கால், நின் கூட்டத்தால் மகிழ்ந்து ஒளி வீசிய அவள் நெற்றி, நீ பிரிவை என்பதை அறிந்தவுடனே, பசலை படர்ந்து நின்னைப் பழிதுாற்றத் தொடங்கி விட்டதே! இத்தகைய கொடுமை வாய்ந்த அவற்றின் இயல்பு அறியாது, அவற்றோடு பகை கொள்வது உனக்குப் பண்பாகாது. நிற்க. "அன்ப! இப்பகையின் கொடுமை எத்தகைத்து என்பது இப்போது நினக்குத் தெரியாது. நீ செல்லும் காட்டில், தானும் தன் இனமும் கூடி வாழும் இடத்தைச் சூழக், காட்டுத் தீப் பற்றிப் பரவி எரியக் கண்ட யானைத் தலைவன், அப்பெருந் தீயைத் தன் கால்களால் மிதித்து அழித்துப் புதுவழி பண்ணி, அவ்வழியே, தன் இனக் களிறுகளை வெளியேற்றி அழைத்துச் செல்லும் காட்சி யைக் காணும் அவ்வளவில், அப் பகைவரின் கொடுமை நினக்குப் புலனாம். அக்காட்சி, துரியோதனன், சூழ்ச்சியால் தன்னையும் தன் உடன்பிறந்தார்களையும், அரக்கு மாளிகையுள் அடைத்து, அம்மாளிகைக்குத் தீ வைத்து விட்டது கண்ட வீமசேனன், அம்மாளிகையுள் பதுவழி செய்து, அதன் வழியே தன் உடன் பிறந்தாரையும் மீட்டுத் தானும் பிழைத்த நிகழ்ச்சியை நினைப்பூட்டிப் பகைவன் ஒருவன் செய்யும் கொடுமையே இவ்வளவு பெரிதாயின், பகைவர் பலர் சேர்ந்து செய்யும் கொடுமை எவ்வளவு பெரிதாம்! அக் கொடுமைகளை யான் எவ்வாறு, தனித்து நின்று தாங்க வல்லேன்' என வருந்துவை. ஆகவே, அன்ப, இவளைப் பிரிந்து போய அப்பிரிவால், அவள் கண், கைவளை, துதல் இவற்றின் பகையைப் பெற்று வருந்தாதே. மேலும், இவள், மழை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/185&oldid=822193" இலிருந்து மீள்விக்கப்பட்டது