பக்கம்:பாலைச்செல்வி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ 183 மறுத்த மாநிலம் மடிந்து வருந்துவதுபோல், நின் அன்பு அறல் காணின் வருந்துவள் பெரிதும். ஆகவே, போக் இனைத் தவிர்வாயாக!” என வேண்டிக் கொண்டாள். கணவன் பிரிவால் காதலிக்கு உண்டாம் கலக்கத்தை, அக் கணவனின் பகைவர்களாக்கிக் கூறும் தோழியின் அறிவுடைமை கண்டு அகமகிழ்வோமாக. "வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால் ஐவர்என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தராக் கைபுனை அரக்குஇல்லைக் கதழ்எரி சூழ்ந்தாங்குக் களிதிகழ் கடாஅத்த கடுங்களிறு, அகத்தவா, 5 முளிகழை உயர்மலை முற்றிய முழங்கு அழல் ஒள்ளுரு அரக்குஇல்லை, வளிமகன் உடைத்துத் தன் உள்ளத்துக் கிளைகளோடு உயப்போகு வான்போல, எழுஉறழ் தடக்கையின் இனம்காக்கும் எழில்வேழம், அழுவம்சூழ் புகைஅழல் அதர்பட மிதித்துத், தம் 10 குழுவொடு புணர்ந்துபோம் குன்றுஅழல் வெஞ்சுரம் இறத்திரால், ஐய! மற்று இவள்நிலைமை கேட்டிமின்; மணக்குங்கால் மலரன்ன தகையவாய்ச் சிறிதுநீ தனக்குங்கால் கலுழ்புஆனாக் கண்ணெனவும் - உளவன்றோ? சிறப்புச்செய்து, உழையராப், புகழ்போற்றி, மற்று.அவர் 15 புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் தொடர்புபோல்; ஈங்குநீர் அளிக்குங்கால், இறைசிறந்து, ஒருநாள் நீர் நீக்குங்கால் நெகிழ்போகும் வளை எனவும் உளவன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/186&oldid=822194" இலிருந்து மீள்விக்கப்பட்டது