பக்கம்:பாலைச்செல்வி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 புலவர் கா. கோவிந்தன் செல்வத்துள் சேர்ந்து,அவர் வளன்உண்டு, மற்றவர் ஒல்கிடத்து உலப்பிலா, உணர்விலார் தொடர்புபோல்; 20 ஒருநாள்நீர் அளிக்குங்கால், ஒளிசிறந்து ஒருநாள் நீர் பாராட்டாக் கால்பசக்கும் நுதல்எனவும் உளவன்றோ? பொருந்திய கேண்மையின் மறைஉணர்ந்து அம்மறை, பிரிந்தக்கால் பிறர்க்குஉரைக்கும் பீடிலார் தொடர்புபோல்; எனவாங்கு ** 25 யாம் நிற்கூறுவது எவன்உண்டு? எம்மினும் நீநற்கு அறிந்தனை, நெடுந்தகை! வானம் துளிமாறு பொழுதின்இவ் வுலகம் போலும், நின் அளிமாறு பொழுதின்இவ் ஆய்இழை கவினே.” பிரிவுணர்த்தப்பட்ட தோழி, பிரியின், பீடிலார் போல், உன்னை அலர் தூற்றிப் பழிப்பனவும் உள எனக் கூறுமுகத்தான், தலைவியது ஆற்றாமை கூறிச் செலவழுங்குவித்தது. 1. வயக்குறு மண்டிலம்.முகத்தவன் - திருதராட்டிரன், 2. முதியவன் - துரியோதனன், 3. புணர்ப்பு - சூழ்ச்சி, 4. கதழ்ளி - மிக்க நெருப்பு: 6. முளி கழை - உலர்ந்த மூங்கில்; முழங்கு அழல் - பேரொலியோடு எரியும் நெருப்பு, 7. வளிமகன் - விமசேனன், 8. உயப்போகும் - உய்யப்போகும், 9. எழுஉறல் - தண்டாயுதத்தை ஒத்த; 12. இறந்திரால் - இறந்திராயில் - போவதானால்; 13. மணக்குங்கால் - சேர்ந்து வாழும் பொழுது, 14. தனக்குங்கான் - பிரியும் பொழுது; 15. உழ்ையரா - அருகில் இருக்க, 16. புறக்கொண்ட - இல்லாத போது; 20. ஒல்கிடத்து- வறுமை உற்றக்கால், உலப்பிலா-உதவாத, 28. துளி - மழை, 29. அளி - அன்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/187&oldid=822195" இலிருந்து மீள்விக்கப்பட்டது