பக்கம்:பாலைச்செல்வி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 வந்தது இளவேனில்! நம் பைந்தமிழ் நாட்டினைப் பண்டு ஆண்டிருந்த அரசர்களுள் பாண்டியரும் ஒருவர். அவர் வழி வந்த ஒர் இளைஞன், நாட்டு மக்கள் நலம் பல பெற்று நன்கு வாழுமாறு நாடாள வல்ல நல்லறிவும், பகைவர் பலர் ஒன்று கூடி வரினும் அழித்து வெல்லவல்ல ஆற்றலும் பெற்று, உலகெலாம் போற்ற வாழ்ந்திருந்தான். அறிவும் ஆற்றலும் பெற்று, அரசர்க்குரிய பண்புகளைக் குறைவறப் பெற்றிருந்த அவன்பால் அன்பு அருள் முதலாம் மக்கட் பண்புகளும் குடி கொண்டிருந்தன. ஏனைய அரசர்கள் போல், என்றும், நாடு, நாடு காவல் என்றே இருந்து விடுவானல்லன் அவன். மலைவளம் காணல், புதுப்புனல் ஆடல், வேனில் விழா முதலாம் இன்ப நிகழ்ச்சிகளில், மக்களோடு மக்களாய்க் கலந்து, மனைவியையும் உடனைழைத்துச் சென்று மகிழும் இயல்புடையன். அவன் தன் நற்பண்புகளுக்கேற்ற நங்கை யொருத்தியே, அவனுக்கு மனைவியாக வந்து வாய்த்திருந்தாள். இருவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/188&oldid=822196" இலிருந்து மீள்விக்கப்பட்டது