பக்கம்:பாலைச்செல்வி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 இ. புலவர் கா. கோவிந்தன் இணைபிரியா அன்றிற் பறவைகள்போல், ஒன்றி ஒருமனப் பட்டு வாழ்ந்திருந்தனர். ஒரு நாள், அப் பாண்டி நாட்டின் அண்டை நாடொன்று அரசிழந்து விட்டது. அந்நாட்டு அரசன், அரசியல் நெறியறியாதவன். தனக்கும், தன் நாட்டிற்கும் தேவையாகும் பொருள்களை, நல்வழியில் ஈட்டும் வகையறியாது, தன் குடிகளை வருத்தி வரி வாங்கி வாழத் தொடங்கினான். அவர்கள்பால் உள்ள பொருள்களை யெல்லாம் கொள்ளையடித்துக் கொண்டு சென்றான். தர மறுப்பாரைக் கொன்றான். தமக்குக் காவலனாக வந்தவன், கொள்ளைங்டிக்கும் கொடியோனாக மாறினமை கண்ட அந்நாட்டு மக்கள் கொதித்தெழுந்தனர். அவர் எழுச்சிமுன் நிற்க மாட்டாது, அந்நாட்டைத் துறந்து ஓடினான். நாடு அரசிழந்து விட்டது. நாட்டு மக்கள் காவலற்றவராயினர். அந்நிலையைப் பயன் கொண்டு கொலைகாரரும், கொள்ளைக்காரரும் தம் கொடுமை களைக் கோலோச்ச முனைந்தனர். அவர் கொடுமை தாளாது, மக்கள் அல்லற்பட்டனர். - மக்கள் அல்லற்படல் கண்ட அந்நாட்டு ஆன்றோர் சிலர், அண்டை நாட்டை அறநெறி பிறழாது ஆண்டு வரும் அவ்விளைஞன்பால் சென்று சரண் புகுந்தனர். தங்கள் நாட்டின் ஆட்சியை மேற்கொண்டு, ೨/6ುಖನು கடிந்து அமைதி காக்க வேண்டினர். இயல்பாகவே மண்ணாசை மிக்க அரசர் குடியிற் பிறந்த அவ்விளைஞன், அண்டை நாட்டின் மக்கள், தாமே வலுவில் வந்து, அந் நாட்டின் ஆட்சிப் பொறுப்பினை அளிக்கின்றனர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/189&oldid=822197" இலிருந்து மீள்விக்கப்பட்டது