பக்கம்:பாலைச்செல்வி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 187 என்றால், அதை ஏற்றுக் கொள்ள மறுப்பனோ? அவன் அவர் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டான். துயர் உறுவாரைக் காணின், உடனே ஓடி, உற்ற துணை செய் எனத் துரத்தும் இயல்புடைய அவன் உள்ளம், அண்டை நாட்டு மக்கள் அரசிழந்து அல்லற்படுகின்றனர் என்பதை அறிந்தவுடனே, ஆங்கு விரைந்து செல்லத் துடித்தது. அதனால், தன் மனைவியை உடனே அழைத்து, அவளுக்கு ஆங்குள்ள நிலைமையைக் கூறிப் போக விடை தருமாறு வேண்டினன். அவன் உள்ளம் வேறு, அவள் உள்ளம் வேறு என்ற நிலையற்றவர் அவர்கள். அவன் எண்ணியதையே எண்ணுவாள் அவள்; அவள் எண்ணுவதையே எண்ணு வான் அவன். அதனால், அவள் அவ் வேண்டுகோளை ஏற்று விடையளித்தாள். ஆயினும், அவள் காதல் உள்ளம் கணவனைப் பிரிந்து வாழவேண்டியுளதே எனக் கவன்றது. அவள் உள்ளக் கவலையை உணர்ந்தான் அவன். "என் அன்பே! நீ சிறிதும் வருந்தற்க. சென்று ஆங்கு சேணெடும் நாட்கள் தங்கிவிடேன். விரைந்து வந்து சேர்வன். வையையாற்று வேனில் விழாவிற்கு வந்து விடுவேன்!" என்று கூறி அவள் கவலை போக்கிப் போனான். அவன் சென்ற நாள் தொடங்கி, அவனைப்பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருந்தன. ஆங்குச் சென்றவன், அந்நாட்டில் தன்னை வந்து எதிர்த்தார் அனைவரையும் வென்று துரத்திய வெற்றிச் சிறப்பும், அந் நாட்டின் உட்புகுந்து கேடு விளைத்து வாழ்ந்த கொடியோர்களை அறவே களைந்து துரத்திய பின்னர், அந் நாட்டு மக்களின் செல்வ நிலை செழிக்கச் செய்த வினைச் சிறப்பும், கொடியோர் அந் நாட்டுப் பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/190&oldid=822199" இலிருந்து மீள்விக்கப்பட்டது