பக்கம்:பாலைச்செல்வி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 189 ஓட்டத்தையும் கண்டு, கண்ட அக் காட்சிகள், சென்ற ஆண்டு வேனில் விழாவை நினைப்பூட்ட, "எதிரே வரவிருக்கும் வேனில் விழாவை உடனிருந்து களிக்க அவர் வந்து சேர வேண்டுமே! அவர் அதற்குள் வந்து சேர்வரோ, சேராரோ!" என எண்ணி ஏங்கினாள். "கணவன் சென்ற நாடோ, சேணெடும் தொலைவில் உள்ளது. மேற்கொண்டு சென்ற வினையோ அருமையும், பெருமையும் வாய்ந்தது. அவர் அதை உரிய காலத்தில் முடிப்பதே அரிது. ஒருவாறு, அதை அக்காலத்தில் முடித்து விடுவாராயினும், இடைவழியைக் கடந்து வந்து சேரல், அத்துணை எளிதில் இயலாதே! அவர் வாராதே நின்று விடின், வேனில் விழா, இன்பம் ஊட்டுவதற்கு மாறாகத் துன்பமன்றோ தரும் ' என எண்ணினாள். அவ் வெண்ணம் அவள் உள்ள உறுதியை உருக்குலைத்து விட்டது. கவலை பெரிதாயிற்று. கண்களும் சிறிதே கண்ணிர் சிந்தத் தொடங்கின. அந்நிலையில் ஆங்கு வந்த தன் தோழியை அழைத்துத், "தோழி! பிரிந்து சென்று, புதிய நாட்டில் சிறப்பெய்தி நிற்கும் நம் கணவர், வண்டுகள் தேன் உண்டு மகிழும் இவ்வேனிற் காலத்து இன்பத்தைப் பெற மாட்டாது வருந்தி வாடும் என் தோள்களின் தளர்ச்சியைப் போக்க வருவாரோ? வாராரோ? தன் புகழ் உலகெலாம் பரவுமாறு பகைவர் நாட்டில் பணியாற்றும் நம் கணவர், எங்கும் இம்' எனும் ஒலியோடு, தேனைத் தேடிப் பறக்கும் தேனிக்களின் ஒலியே கேட்கும் இவ்வேனில் விழாவின் பயனைப் பெற மாட்டாது வருந்தும் என் வாட்டத்தை ஒழிக்க, தோழி! வருவாரோ? வாராரோ? கொடுங்கோல் ஆட்சியைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/192&oldid=822201" இலிருந்து மீள்விக்கப்பட்டது